பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

வாழ்க்கை என்ருகி வாழும் செயற்பாடு - வாழும் ஒழுக்கம் எனப் பொருள்படுகின்றது.

அவ்வாழ்க்கை உள்ளத்து உணர்வின் வாழ்வு, புறத்து கடப்பு வாழ்வு என இரு வகையில் அடங்கும். இவ்விரு வகையே இல்லத்தில் இருந்து வாழும் வாழ்க்கை என்றும், வெளியுலக வாழ்க்கை என்றும் அமையும். இவ்வமைப்பைக் கூர்ந்து உணர்ந்த தமிழர் அகம், புறம் என வகுத்து இலக்கண இலக்கியம் படைத்தனர்.

இயற்கைப் பாங்கில் அமைந்த இவ்வாழ்வியலில் இயற் கையில் மலர்ந்த மலரைத் தமிழர் இணேத்துக்கொண்ட திறம் அறிவால் மோந்து சுவைக்கத் தக்கது. உலகில் பல இனத் தினரும் மலரைப் பயன்படுத்துகின்றனர். சிறப்பாகவும் .பயன்படுத்துகின்றனர். ஆனால், வரையறையுடன் - இயற். கைப் பாங்கு வாடாத வரையறையுடன் இசைந்து வரும் இலக்கணமாக்கி மலரைக் கொண்ட திறம் தமிழர் தம் தனித் திறம் ஆகும்.

வாழ்வியலை அகம், புறம் ஆக்கி அவற்றை முறைப்படுத்தி வகைப்படுத்தி விரித்த தமிழர் அவ்வகைகளின் சின்னங்களாக மலரைக் கொண்டனர். அகத்தைக் குறிஞ்சி மலர், முல்லை மலர், மருத மலர், நெய்தல் மலர், பாலே மலர், என மலர் களைக் கொண்டே பெயர் சூட்டினர். புறத்தையும் வெட்சி மலர், கரந்தை மலர், உழிஞை மலர், கொச்சி மலர், வஞ்சி மலர், காஞ்சி மலர், தும்பை மலர், வாகை மலர், என மலர் களாலேயே வகை செய்து பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

மலர்கள் யாவும் மணம் பரப்புவனவே. அம்மணத்திலும் விருப்பத்தைக் கவரும் நறுமணம் உண்டு, விருப்பைத் தொடாத வெறும்மணமும் உண்டு. அகத்திற்கும் புறத்திற் கும் அமைக்கப்பட்ட மலர்களே ஒருமுறை மேற்போக்காக கோக்கினும் அகமலர்கள் நறுமணங்கொண்டவையாகக் -காணலாம். அத்துடன் அவை என்றும் மணங்கருதிச்