பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18.

இருவர்பாலும் எழும் இன்ப அவா-விருப்பம் காமம் எனப் படும். அக்காமம் கெஞ்சில் அரும்பி, உடலில் மலர்ந்து, உள்ளத்தில் மணப்பது. ஐம்புலனுக்கும் காமம் இன்பமென் ருலும் ஒரு புலனுல் மட்டும் உணர இயலாத அளவு துண்மை யானது. நுண்மையிலும் மென்மையானது. அம்மென்மையைக் குறிக்கக் திருவள்ளுவப்பெருந்தகையே முனேந்தார்.

17 "மலரினும் மெல்லிது காமம்" என்ருர், அதனல், காமம் மிகச் செவ்விது என்று குறித்து அந்தச் செவ்வியை உணரத் தலைப்படுவது எல்லாராலும் இயலாத ஒன்று என்று முடிவு கட்டி,

"சிலரதன் செவ்விதலைப்படு தார்" -:

- என நிறைவேற்றினர்.

மெல்லிய காமத்தின் தொடக்கம் இனம் புரியாத மயக்கம் தருவது. இன்ப மாத்திரைக்கு முன் பூசும் துன்பப் பூச்சு. இம்மாத்திரை வெளிக் கசப்பு உள் இனிப்புள்ளது. ஒரு பெண்ணிடமிருந்து ஆணிற்கும் அதே ஆணிடமிருந்து அதே பெண்ணிற்கும் மாறி மாறித் தொற்றி வளர்வது. துயரில் முடியாத இன்பத்திற்குக் கட்டுக் குலையாத அடித்தளம் அமைப்பது. உள்ளத்தை மயங்க வைத்துத் தத்தளிக்கச் செய்யும் காமத்தை உடலேக் கலக்கி அயரச் செய்யும் நோய்க்கு ஒப்பிடுவர். இக்கோயின் வரலாற்றை மலரின் வரலாருகவே திருவள்ளுவர், * ,

18 "காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி

மாலை மலருமிந் நோய்" - என்று விரித்தார்.

இந்நோய் காண்பதற்கு ஒரு பக்குவம் பெற்ருகவேண்டும். அதுதான் பருவம் பெறும் பக்குவம். அப்பருவந்தான்

  • திருக்குறள் . 1289 18 திருக்குறள் : 1.227