பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

பூவைக்கொண்டே அமைத்த முல்லச் சூட்டை அணிவிக்கச் செய்வர். முல்லைச் சூட்டு என்பதே கற்பின் அறிகுறி. இது சூட்டப்பட்டால் பெண் தனது கன்னிமை கழிந்து கற்பு நெறிப்பட்ட இல்லறத்திற் புகுந்தாள் என்பதாகும்.

இதனுல்தான் முல்லை என்ருல் கற்பு என்னும் பொருள் எழுந்தது. கற்பு என்பதற்கு 'முல்லை என்னும் சொல் ஆகியது.

'முல்லை கற்பின் சின்னம்’ என்பதைப் பின்னர் விரிவாகக் காணலாம். முல்லைச் சூட்டை அணிவித்தவனே முல்லைத் தாரை அணிவிப்பான். சூட்டிய முல்லையும் மணக்கும். மங்கையும் மணப்பாள். -. .

நறுமணமும் திருமணமும் இணைந்து இழைந்து மிளிரும்.

"குறிப்பிற் குறிப்பு உணர்வார்."

திருமணம் இல்லறத்தின் புகுவாயில். அவ்வாயிலில் குமரனும் குமரியும் கைகோத்துப் புகுவர். தாமே புகுதலும், பெற்ருேர் புகுத்தப் புகுதலும் நிகழும். பெரும்பான்மையாகப் பெற்ருேர் புகுத்தப் புகுதல் கிகழும். மணமக்கள் தாமே புகுதல் நேருவது ஏன்?

பருவமுற்ற கன்னிப் பெண் தானே விடலைமேற் காதல் கொண்டு கணவனுக்கிக்கொள்ள விரும்புவாள். பெற்ருேர் உற்ருர் அறியாமல் இரவிலோ பகலிலோ தனியிடத்தில் இருவரும் கூடுவர்; குலாவுவர். இது களவு எனப்படும். இக்களவு அக்கம் பக்கத்தார்க்கு வெளிப்படுவதுமுண்டு. அவ்வாறு வெளிப்பட்டுப் பரவுவது "அலர்” எனப்படும். மலரின் அடுத்த பருவம் அலர் என்று கண்டோம். மலரின் இதழ்கள் அகல விரிந்து பலர் அறியுமாறு மணத்தை வெளிப் படுத்துவது அலர். இவ்வகைப் பொருத்தத்தால் களவின் மறை வெளிப்படுவதும் இப்பெயர் பெற்றது. இதன்கண் னும் மலர் பொருந்தி கிற்கின்றது. .