பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

.சிலம்பு ஒரு சின்னம், - -

மலர் அழகை வழங்கும்; அழகை ஊட்டும். தன் தோற்றத் தால் அழகை வழங்கும்; தன்னை அணிவதால் அழகை ஊட்டும். மலர் மாந்தர் பெற்ற முதல் அணிகலன். பிற பொன், மணி முதலிய அணிகலன்கள் யாவும் மலர் அணியை ஒட்டி உருவாயின.

மலர் மணமும் அழகும் கருதிச் சூடப்பட்டதாயினும்

அது மங்கலக் கருத்தும் கொண்டது. மலர் மங்கலக்

கருத்து கொண்டது மட்டுமன்று; மங்கலம் அல்லாத துன்பக் காலத்தில் சூடப்பட்டதாகும்:

ஒல்லையூர் என்பது ஒர் ஊர். அங்கு வாழ்ந்த கொடைப் பெருமகனும் வீரனுமாகிய பெருஞ்சாத்தன் என்பான் போர்க்களத்தில் மாய்ந்தான். அத்துக்கத்தால் என்றும் முல்லேயைச் சூடும் பழக்கமுள்ளவர் யாவரும் அன்று சூட வில்லையாம். குடவாயில் கீரத்தனுர் என்னும் புலவர் அன்று பூத்த முல்லையைப் பார்த்து இரங்கி,

2 “முல்லைச்செடியே, வீரன் சாத்தன் மாய்ந்தான் இன்று குமரன், குமரி உன்னே அணியார்; பாணன், பாடினி சூடார்; ஏன் வீணுகப் பூத்துள்ளாய் ' என்று பாடினுர்,

மலர் வழி எழுந்த பிற அணிகலன்களில் மங்கலம் கருதி யவை இன்றியமையாத அணிகலன்களாக அமைந்தன. அழகு கருதியவை அடுத்த கிலே கொண்டவையாயின.

2? " இளையோர் சூடார், வஃயோர் கொய்யார், கல்லியல் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன் சூடான், பாடினி அணியாள் ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே."

புறநானூறு: 24