பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

சிலம்பைக் கழற்றி வைத்தும் செல்லுவாள்; எடுத்தும் செல் லுவாள். வைத்துச் சென்றல் மீண்டுவந்து தன் இல்லத்தி, லேயே திருமணம் புரிந்துகொள்வாள் என்பது கருத்தாகும்.

  • "வைகுபுலர் விடியல் மெய்கரந்து தன்கால்

அரியமை சிலம்பு கழி இப் பன்மாண் வரிபுனை பந்தொடு வைகிய செல்வோள்" - என்னும் கற்றினேப் பாடல் இக்குறிப்பைத் தருகின்றது. -

உடன் போக்கில் நீண்ட தொலைவு கடக்க நேருமாதலால் கழற்றிச் செல்வாள். அதுபோதும் கழற்ற விரும்பாதவள் அணிந்தே செல்வாள். திருமணத்திற்கு முன்னர் இவ்வாறு கழற்றிச் செல்வது அரிதாகவே நிகழும். இச்செயல் கூடா ததாகவும் கருதப்பட்டது. :

  • குமரனுடன் ஒடிப்போன குமரியின் தாய் காலேயில் அவள் கழற்றி வைத்துப் போன சிலம்பைப் பாாத்தாள். மிக வருந்தினுள். 'சிறுபெண்ணுகிய இவள், தான் விரும்பிய துணைவன் தந்த ஊக்கத்தால் தான் அறியாத ஊருக்குச் செல்ல இசைந்தாளே. வழி, காட்டு வழியா பிற்றே, வெய்யில் கொளுத்துமே; அதிகம் நடந்தறியா தவள் தொலைவில் நடக்க நேருமே என்றெல்லாம். நினைத்துப் பார்க்காமல் புறப்பட்டது. கொடுமையானது. கழற்றக்கூடாத சிலம்பைக் கழற்றிப் போனது அதனிலும் கொடிது’ - எனக் கவன்ருள்.

மேலும் தலைவன் தலைவி கூடிக் குலவும்போது காலில் கிடக்கும் இச்சிலம்பு ஒசையிட்டும் இடையூருகும். சில நேரம்

32 நற்றினே : 1.2

3. "தானமர் துணைவன் ஊக்க ஊங்கி

உள்ளாது கழிந்த முள்ளெயிற்றுத் துவர்வாய் சிறுவன் கண்ணி சிலம்பு கழீஇ அறியாத் தேயத்தள் ஆகுதல் கொடிதே"

. - அகநானூறு 388