பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

பழுதுபட்டும் போகும். பழுது பட்டதைத் தாய் அறிந்தால் தன் களவுக் குட்டு வெளிப்படுமே எனக் கருதி அந்நேரத் திலும் கழற்றப் பெறும்.

34 ஒருநாள் மாலை. கடற்கரையில் புன்னை மரச் செறிவுக் கிடையே அவள் அவனுடன் நண்டு பிடித்து விளையாடினுள். கூடிக் குலவி ஒடி ஆடினள். ஒடியபோது காற் சிலம்பு உடைந்தது. ஐயோ, தாய் அறிந்தால் தான் களவாக அவனுடன் ஆடியதை அறிவாளே என அஞ்சிள்ை. தன் தோழியிடம் இதனைக் கூறிஞள். தோழி தலைவனிடம் போள்ை. உன்னுடன் ஆடியதால், உடைந்த சிலம்பு

அவளைக் காட்டிக்கொடுத்துவிடும். எனவே, அதனைப் பொருந்தவைத்துப் பொருத்துவதற்கு உரிய மண்ணை. நீதான் கொணரவேண்டும்; என்று வேண்டினள். ... " இப்படியொரு விளக்கத்தை கற்றினேப் பாடல் ஒன்று கறுகின்றது.

இவ்வாறு இடையிடையே சில காரணங்களால் சிலம்பைக் கழற்ற நேரும். ஆனால், திருமணத்திற்கு முன்னர் கன்னித்தன்மை கழிவதால் அதன் அறிகுறியாக ஒரு நிகழ்ச்சியே அமையும். அந்நிகழ்ச்சியும் ஒரு மணம் எனவே கூறப்படும். அது சிலம்பைக் கழற்றி வைப்பதாகும். இஃது ஒரு மரபு நிகழ்ச்சியாகவே கொள்ளப்பட்டது. இதற்கென மணமகள் ஒரு கோன்பை மேற்கொள்வாள். இது " சிலம்பு கழி நோன்பு" எனப்படும்.

35 தலைவன் மீண்டு தலைவியைத் தன்மனைக்கண் கொண்டு வந்துழி, அவன் தாய் ' சிலம்பு கழி கோன்பைச் ” செய்கின்ருன் எனக்கேட்ட (மணமகளின்) கற்ருய் ஆண்டு கின்றும் வந்தார்க்குக் கூறியது" - என கச்சிர்ைக்கினியர் எ ன் னும் உரையாசிரியர் தொல்காப்பியத்தில் இக் நோன்பைக் குறித்துள்ளார்.

  • கற்றின: 568, * தொல்: அகத்திணையியல்: 36 உரை.