பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36.

3. "தலைமகள் தன்னகத்தே வதுவைக் கலியானம் (திருமணம்) செய்வான் எடுத்துக் கொண்டான் என்பது கேட்ட கற்ருய் "ஒழிந்த கலியாணம்' (சிலம்புகழி கோன்டி நிகழ்ச்சி) செய்யினும் கம் அகத்தே வதுவைக் கவியாணம் செய்ய நேருங்கொல்லோ, காளையைப் பயந்தாள் ” - என்னும் இறையனர் களவியல் உரையும் " ஒழிந்த, கலியாணம்” என்று இச்சிலம்பு கழி கோன்பை ஒரு மண கிகழ்ச்சியாகவே குறிக்கின்றது.

3 'மணம் புரிவதற்கு முன் மணமகளது காலில் பெற்ருேர்கள் அணிந்திருந்த சிலம்பை நீக்குதற்கு ஒரு சடங்கு செய்யப்படும். அது “ சிலம்பு கழி கோன்பு" எனப்படும்” - என்று தமிழ்த் தாத்தா உ. வே. சா. அவர்களும் விளக்கியுள்ளார்கள். .

எனவே,

சிலம்பு, கன்னிப்பெண்ணிற்கு இ ன் றிய ைம யாத அணிகலன்

சிலம்பணிவது ஒரு மரபு,

அது, கன்னி கழியுமுன் கழற்றப் பெறும்.

அதற்கொரு மனநிகழ்ச்சியே உண்டு.

அது ' சிலம்பு கழி நோன்பு ' எனப்படும்.

இவற்ருல்

சிலம்பு கன்னிப்பருவத்தின் சின்னம்.

திருமணம் பற்றிய மரபுகள் யாவும் பெற்ருேர் இசை வுடன் நிகழ்த்தப்பெறும் திருமண நிகழ்ச்சியில்தான் முறை. யாக அமையும். களவுத் திருமணத்தின்போது இம்முறை: அமையுமாயினும் முறையில் ஒழுங்கு இருக்காது.

36. இறையனுர் களவியல் : 28 உரை, * ஐங்குறுநூறு 399 குறிப்புரை