பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழி :

தலைவி :

- தோ

தோ

முல்லை மணக்கிறது.

என்னேடி, கும்மென்றிருக்கிருய்?

குமரிப்பெண் கும்மென்றில்லாமல் உம் மென் ரு இருப்பாள்? கும்மென்றிருப்பது தெரிந்த உனக்கு 'கம்'மென்று மணப்பது படவில்லையோ?

என்னேடி, புதிர் போடுகின்ருய்! இங்கு, எங்கும் எந்த மலரும் இல்லை. இருவரும் இன்னும் ரோடாத தால் மலரைச் சூடவில்லை. மணக்கிறதாம்; அதிலும் "கம்’மென்று மணக்கிறதாம். என் முக்கு மட்டும் தூங்குகின்றதோ? . A

ஆகா, என்ன இனிய மணம்! மெல்லிய மணம் இன்பத்தைக் கெல்லுகின்றதே!

அந்த வகை மணமோ? இன்பமா? காதற் பொன்னே 1 என்ன நடந்தது! ஒளிக்காமற் சொல்லடி!

உன்னிடம் ஒளிப்பேணு என்ன? கேளடி, கேள். ஒரு திங்களுக்கு முன், ஒருநாள்.

அமைதியான இரவு

அதுதான் ఇతడి. இ ைர ச்ச லான இரவு.

தட்டையான பறை முழங்குவது போன்று இரைச்சல் எழுந்த இரவு. பொன்னேப் பனிக் கட்டியில் குழைத்து இந்த உலகத்திற்கு முலாம் பூசிக்கொண்டிருந்தது முழு நிலவு.

இரைச்சல் என் ருயே, முலாம் பூசிய இரைச்சலோ?