பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

இச்செய்தியையும் தொல்காப்பியம் மிகத்திறம்படக் கூறு கின்றது :

"மறையவர், மன்னவர், வணிகர் ஆகிய மூவர்க்கும் கரணம் பொருத்தப்பட்டது. (அவர்களே விரும்பி ஏற் காமல் பொய், வழு காரணமாகப் பிறரால் சேர்க்கப்பட்டது என்பதைக் குறிக்க, ' புணர்த்த கரணம்” என்ருர் ) அக் கரணம் பின்னர் கீழ் மக்களாகக் கருதப்பட்ட உழவர்க்கு ஏற்றப்பட்ட காலமும் உண்டு.

இதனைத் தொல்காப்பியர் சொல்லாகக் காணலாம் :

" "மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்

கீழோர்க் காகிய காலமும் உண்டே" - என்பது அந்நூற்பா.

மேலும் தமிழ்ச் சான்ருேர் வகுத்த அக்காலக் கரணம் தமிழர் அல்லாத வேற்று மொழியினர் இடம் பெறும் கரணமாக அமைந்திருக்காது.

? ஆளுல், சிலப்பதிகாரம் காட்டுகின்ற திருமணத்தில் மாமுது பார்ப்பனர் புகுந்துவிட்டார். மறைக்கு வழி திறந்து விடப்பட்டது. தீவலம் வரத் துவங்கிவிட்டனர். ஆலுைம் அரிசி தூவப்படவில்லை. அது மறைவழி காட்டிய தி ல் மறைந்துகொண்டுள்ளதோ என்னவோ?

கரணம் புகுந்த சிலம்புத் திருமணத்திலும் ஒரு பகுதியைத் தான் மறையவர் பற்றிக்கொண்டுள்ளார். மற்ருெரு பகுதி மகளிர்பால் இருந்ததை அறிகின்ருேம். மகளிர் பகுதியில் கெல்லக் காணுது போயினும் சில மலர்கொண்டு தூவி வாழ்த்தியதைக் காண முடிகின்றது.

  • தொல் : பொருள் : 142, * மாமுது பார்ப்பான் மறைவழி காட்டத்

தீவலஞ் செய்வது காண்பார்கண் நோன்பென்னே"

- - - சிலம்பு : 1 : 51, 52