பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

ஆண்டாளுக்குப் பின் வந்த கம்பரும் திருமணத்தில் இக் கரணங்கள் அமைந்ததைக் காட்டுகின்ருர் : -

மிதிலையில் சீதைக்கும் இராமனுக்கும் திருமணம். * "இடம்படு தோளவ ைேடியை வேள்வி

தொடங்கிய வெங்கனல் சூழ்வரு போதின்" - - - என்று மணமங்கலத்தில் மறையோர் வேள்வி செய்ததையும், மணமக்கள் அதனேச் சுற்றி வந்ததையும் காட்டினுர்,

'. 'வலங்கொடு தீயை வணங்கினர் வந்து

பொலம்பொரி செய்வன செய்பொருள் முற்றி இலங்கொளி அம்மி மிதித்தெதிர் ஏறிக் கலங்கலில் கற்பின் அருந்ததி கண்டார்"

- என்று தீயை வணங்கியதையும், பொரி துரவியதையும், அம்மி மிதித்ததையும், அருந்ததி” கண்டதையும் கொண்டு காட்டினர். கம்பரும் தம் காலத்துத் தமிழ்நாட்டு நிகழ்ச்சிகளே கினேவிற்கொண்டு பாடினர்.

ஆயினும் இவற்றுள்ளும் அரிசியைத் துரவி வாழ்த்திய செய்தி இல்லை. மலரையோ கெல்லையோ தூவி வாழ்த்திய செய்தியினே எதிர் பார்ப்பதற்கு இல்லே.

மேலே காணப்பட்ட கரணங்களுடன் மேலும் பொருளற். றவையும் கூடின. கூடிய பொருளற்றவை காலப்போக்கில் பொருள் மாறியும் கடந்து வருகின்றன. அவற்றுள் ஒன்று "அரசாணிக்கால்" நிகழ்ச்சி.

திருமணத்தில் "அரசாணிக்கால் கடல்" என்னும் ஒரு கிகழ்ச்சி இடம் பெறுவதை அறிவோம். மணவறையில் மங்கல நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்னர் அரச மரத்துப் பசுங்கிளே ஒன்றை இலைகளே நீக்கிக் கொணர்வர். அதற்குச்

" கம்பராமாயணம் : கடிமனப் படலம் : 91. * கம்பராமாயணம் : கடிமணப் படலம் : 92.