பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

கருத்தில் ஒரு கோலே உரியார் வழி அனுப்புவான். அக் கோல் அரசனது இசைவு ஆணையை அறிவிக்கும் கோலாக -வும் அமையும்.

அக்கோல் வருவதை நிகழ்ச்சி நடத்துவோர் அரசனது வருகையாகவே கொள்வர். அரசன வரவேற்பதுபோன்றே மங்கல இசையுடன் வரவேற்று, சந்தனம் பூசி, மாலை .யணிவித்து வரவேற்பர். பட்டு அணிவித்து மதிப்பளிப்பர். செல்வம் படைத்தோர் பொன்கட்டுவர். எளியோர் அதன் பாங்கில் மஞ்சள் கட்டுவர். அரசனே வந்திருப்பதாகக் கருதி மணமக்கள் முன்னே அமரவைப்பதுபோல் அக்கோலே நடுவர். அவன் வாழ்த்துவதாகக் கருதி மங்கலத்தை கிறைவேற்றி மகிழ்வர்.

அக்கோல்- கால் அரசனது ஆணேபெற்ற கால் என்னும் கருத்தில் அரசன் ஆணே கால் - அரசு ஆணே கால் - ' அரசாணைக்கால்’ எனப் பெயர் பெற்றது. இஃதே காலப் போக்கில் 'அரசாணிக்கால்” என மருவிற்று. அஃது அரச மரத்துக் காலாகியது. பிற்காலத்தில் அக்கால் கடப் பட்டு விரைந்து தழைக்கவேண்டும் என்னும் ஆர்வத்தில் ஒதியங் காலாக மாறியது.

இந்த " அரசாணி இலக்கியத்திலும் ஏறிற்று.

ஆண்டாள் நாச்சியாரது தந்தையார் பெரியாழ்வார் ஒரு தாயின் வாயில் வைத்துப் பேசவைத்தார். காதல் குறும்பன் கண்ணன் ஒரு கன்னியை “ இழுத்துக்கொண்டு ' போய்விட்டான். பறிகொடுத்த தாய் அவளே நினைத்து புலம்புகின்ருள் :

' கொண்டுபோன என் குமரிக்கு மணக்கோலஞ் செய்வர். மணவீட்டில் வைப்பர். ஊரார் யாவரும் அறியுமாறு இப்பெண் கண்ணனுக்கு இவள் மணமகள் என்று சாற்றுவர்.