பக்கம்:முல்லை மணம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. முல்லே மணம்

கைகேயிக்கு ஒரு பெண் இருந்தாள். அவள் குகியி என்னும் பெயருடையவள். தன் அன்னேயின் இயல்பை யும் உருவத்தையும் அப்படியே பெற்றவள் அவள். சீதை முதலில் வனவாசம் செல்வதற்குக் கைகேயி காரணமாக இருந்தாள். இரண்டாம் முறை சீதை வனவாசம் செய்த கதை உத்தரகாண்டத்தில் இருக்கிறது. அந்த வனவாசத் துக்குக் கைகேயி மகளாகிய குகியி காரணமாளுள்.

இராமன் இராவணனே வென்று அயோத்திக்கு வந்து முடி சூட்டிக்கொண்டான். நாடெல்லாம் திங்கள் மும்மாளி பெய்து செழித்தது. சிதை கருவுற்ருள். இராமன் கைகேயியி னிடம் அளவற்ற அன்பு பூண்டு ஒழுகினன்.

ஒரு காள், அந்தப்புரத்தில் சீதை தன் காத்தியாகிய குகியியோடு பேசிக்கொண்டிருந்தாள். இராமன் இராவண வதம் செய்ததைப் பற்றிய பேச்சு வங்தது. இலங்கையில் சிறையிருந்த செல்வியாகிய சிதை இலங்கையைப் பற்றி ஏதோ சொன்னாள். அப்போது அவளுடைய அருமை காத்தி யாகிய குகியி, "அண்ணி, இராவணன் பத்துத் தல்ை இருபது கைகள் கொண்டவன் என்று சொல்கிருர்களே, அவன் எப்படி இருப்பான்? நீ பார்த்திருப்பாயே; சொல், பார்க்கலாம்' என்ருள்.

"அவனே நான் கண்னெடுத்துப் பார்த்ததில்லை. ஆனல், அவன் கால்கத்தைப் பார்த்திருக்கிறேன். அதைக் கொண்டே அவன் உருவம் எப்படி இருக்குமென்று உணர்ந்துகொள்ளலாம்."

"அது எப்படி முடியும்?" ' கன்ருக உணரலாம் : எழுதியும் காட்டலாம்." "அப்படியா? நீ சொல்வது வியப்பாக இருக்கிறதே! அப்படி எழுதக்கூடியவர்கள் யார்? உன்னல் எழுத முடியுமா? முடியுமானல் எழுதிக் காட்டு, பார்க்கலாம்!” என்று ஆவலோடு கேட்டாள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/102&oldid=619716" இலிருந்து மீள்விக்கப்பட்டது