பக்கம்:முல்லை மணம்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துயிலாத காதலி 109.

கொஞ்சம் கொஞ்சமாக ஊரோசை அடங்கி வருவதை அவள் கவனிக்கிருள். தாமரைப் போது விரிந்து மெல்ல மெல்ல ஒவ்வோரிதழாக மடங்கினுல் எப்படி இருக்கும்? அப்படியல்லவா உலகம் மெல்ல மெல்ல ஒடுங்கி விற்கிறது? இதுவே இவ்வளவு பயங்கரமாக இருக்கும்போது பிரளயம் இன்னும் எவ்வளவு பயங்கரமாக இருக்கும்? குழந்தை யைப் பெற்றவள் துயில்கிருள்; குழந்தையை இழந்தவள் துயில்கிருள்; கடன் கொடுத்தவன் துரங்குகிருன் கடன் கொண்டவனும் தாங்குகிருன்.

எல்லாரும் துயிலில் ஆழ்ந்திருக்கும்போது அவள் மாத்திரம் விழித்திருக்கிருள். இரவு கள்ளென்று செறிக் திருக்கிறது. பேச்சு அடங்கி யாவரும் அடங்கிவிட் டார்கள். பரந்த உலகம் முழுவதுமே தூக்கத்தில் ஆழ்ந்து விட்டது. இந்த மோனப் பரப்பினிடையே நான் ஒருத்தி தான் தூங்காதவள். ஆம்; கான் ஒருத்திதான்; வேறு யாரும் இல்லை என்று அவள் கினைத்துக் கொள்கிருள்; வருந்துகிருள்; பெருமூச்சு விடுகிருள்.

நள்ளென் றன்றே யாமம்; சொல்.அவிந்து இனிதடங் கினரே மாக்கள்; முனிவின்று நனந்தலே உலகமும் துஞ்சும்; - ஓர்யான் மன்ற துஞ்சா தேனே! - (நள் என்றன்று யாமம் - நடு இரவு செறிவுடையதாக இருக் கிறது; அவிந்து - அடங்கி; முனிவு இன்று-வெறுப்பு இல்லாமல்; நனந்தலே - பரந்த இடத்தை உடையி; துஞ்சும் - துரங்கும்; ஒர் யான் - நான் ஒருத்தி மட்டும்; மன்ற - கிச்சயமாக.) - - - - -

இப்படி ஒரு காதலி கினேந்து தன் தனிமை கருதி வருந்தியதாகப் பதுமனர் என்னும் புலவர் பாடினர். இந்தப் பாடல் குறுக்தொகையில் இருக்கிறது.

திருவள்ளுவர் படைத்த காதலி ஒருத்தி இதே நிலையில் இருக்கிருள். அவளுக்கும் உலகம் முழுவதும் தூங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/115&oldid=619730" இலிருந்து மீள்விக்கப்பட்டது