பக்கம்:முல்லை மணம்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 முல்லை மணம்

வதைக் கண்டு வருத்தமாக இருக்கிறது. துயரம் அடை கிறவர்களுக்குத் தம்மைப் போலத் துயருறுபவர் வேறு ஒருவர் இருந்தால் அவரைக் கண்டு சற்றே ஆறுதல் பிறக்கும்; அவரிடம் இரக்கமும் தோன்றும். இந்தக் காதலிக்கு அப்படி ஒரு கிலே வருகிறது. உலகத்தில் பறவை, விலங்கு, மனிதர் எல்லாரும் தாங்குவதை அவள் உணர்ந்தாள்.

அட, இவ்வளவு பேரும் பகல் நேரத்தில் தங்கள் தங்கள் வேலையைப் பார்ப்பார்கள்; ஒடி ஆடி உழைப்பார் கள். அத்தனே பேரும் இப்போது எல்லாவற்றையும் மறந்து தூங்குகிருர்களே! இரவு வந்ததனால் அல்லவா இவர்கள் துயில்கிருர்கள்? ஆம்; இந்த இரவே. இவ்வளவு பேரையும் தூங்கச் செய்திருக்கிறது. நான் ஒருத்திதான் அதன் கைக்குள் அகப்படவில்லை. நான் மாத்திரம் துரங்கா மல் இருக்கிறேன் என்றல்லவா கினைத்தேன்? அது தவறு, தவறு! இவ்வளவு உயிர்களேயும் துரங்கப் பண்ணிய இரவு என்னும் கங்கை துாங்கவில்லையே! இதோ உலக முழுவதும் இருள் படர்ந்த மேனியோடு பரந்து கிற்கிருளே குழந்தை களேத் துரங்கச் செய்துவிட்டுத் தான் மாத்திரம் விழித்திருக் கும் தாயைப்போல அல்லவா இருக்கிருள்? ஐயோ! பாவம்! அவளுக்கு நான் ஒருத்திதான் துணையாக இருக்கிறேன்' என்று இரங்குகிருள். எப்படியோ ஆறுதல் பெற வேண்டுமே! அந்தப் பேதை மனம் இப்படியெல்லாம் கற்பனை செய்துகொண்டு இரங்குகிறது.

மன்உயிர் எல்லாம் துயிற்றி, அளித்துஇரா! என்அல்ல தில்லை துணை. -- - (உலகத்தில் நிலைபெற்ற உயிர்களையெல்லாம் துரங்கச் செய்து விட்டு - ஐயோ பாவம் இந்த இாவு - என்னே அன்றி வேறு துணை யின்றி இருக்கிறது. . . . . . . . . . . . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/116&oldid=619731" இலிருந்து மீள்விக்கப்பட்டது