பக்கம்:முல்லை மணம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துயிலாத காதலி 113

இருக்கிருள். அவளைத் தேற்றி ஆறுதல் கூறிக்கொண் டிருக்கிருள். அவள் கூட இப்போது துரங்கிவிடுகிருள்.

தனிமைத் துயரம் பொருத அந்த இளம் பெண் உலக மெல்லாம் தூங்குவதைக் கண்டு வருக்தியது உண்மை: ஆல்ை, இப்போது தோழியும் தூங்கிப்போனதை உணர்ந்தபோது கோபம் கோபமாக வருகிறது. ஒருவ ராவது ஏன் என்று கேட்க ஆள் இல்லையே! என்ற வருத் தம் மீதுார்கிறது.

குழந்தைகள் எங்காவது விழுந்துவிட்டால் ஓரளவு அழும்; நாலு பேரைக் கண்டுவிட்டால் அதிகமாக அழும். மற்றவர்களுடைய கவனத்தைத் தம்மிடம் திருப்புவதற் காக அழுது புலம்பும். அவ்வாறு இந்த இளம்பெண் உலகத்தை விழிக்கச் செய்து, தன்னிடம் கவனத்தைப் பாய்ச்சச் செய்யலாமா என்று கினைக்கிருள். ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. - . -

அப்போது காற்று வீசுகிறது; குளிர்ந்த காற்று. அதை அவள் விரும்ப்வில்லை. அதன் குளிர்ச்சி இப்போது முள்ளாகக் குத்துகிறது. அவள் உடம்பை அது அசைப்பதில்லை. ஆல்ை, அவள் உள்ளம் அசைகிறது; குலுங்குகிறது. புயற்காற்றில் அகப்பட்ட பூங் கொடி போலத் தள்ளாடுகிறது. பிரிவினல் காதல் நோய் பரந்து பொங்குகிறது. அந்த கோயாகிய தீக்கு இந்த அசைவளி. மெத்தென்று அசைந்து வரும் காற்று-துருத்தியாக உதவுகிறது. . .

'நான் இவ்வளவு துன்பப்படுகிறேனே! சுழன்று அசை யும் இந்தக் காற்று என்னத் துன்புறுத்த, எத்தனை வேதனைப்படுகிறேன்! இதனே இந்த ஊர் கொஞ்சமாவது தெரிந்து கொண்டிருக்கிறதா? தன்பாட்டுக்குக் கவலை இல்லாமல் குறட்டை விட்டுத் துாங்குகிறது.'

மு. ம-8 .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/119&oldid=619734" இலிருந்து மீள்விக்கப்பட்டது