பக்கம்:முல்லை மணம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 முல்லை மணம்

வளர்த்துத் தம் கணவர் சென்ற இடத்துக்குப் போக முந்துகின்றனர். அவர்கள் எரி மூழ்குவதைத் தன் கண்ணுல் காணச் சகியாத பாண்டியன், தன் மேலாடை யால் கண்ணே மூடிக்கொள்கிருன். போர்க்களத்தில் ஆண்மை கலங் காட்டிப் போரிட்ட மன்னர்கள் பலம் இழந்து சாய்வதைக் கண்டு அவன் இரங்கவில்லை. ஆனல், இப்போது இம் மகளிர் எரி மூழ்குவதைக் கண்டு மனம் இரங்கிக் கண்ணே மறைத்துக்கொள் கிருன்.

அவன் இரங்குவது பெரிதன்று. அவன் யானே என்ன செய்கிறது? அது எத்தனை நுட்பமான உணர்ச்சியை உடையது!

போரில் வீரர்கள் பட்டது மாத்திரம் அன்று; பகை யரசர் யானைகள் பலவும் பட்டன. அந்த யானைகள் அமைதி யான வாழ்வு கடத்தும்போது, அவற்றிற்கு இன்பம் கல்கப் பிடிகள் இருக்கின்றன. அந்தப் பிடிகள் இப்போது. அங்கே வந்து புலம்புகின்றன. பகையரசர் ஊரில் வந்து அஞ்சாமல் போர் செய்தான் பாண்டியன். பகைவன் நாட்டுப் போர்க்களமாக இருக்தது அது. இப்போது: வழுதி அந்தக் களத்தைத் தன்னதாக்கிக் கொண்டான்.

போர்க்களத்துக்கு அப்பால் இருந்த யானைப் பந்தியில் பிடிகள் இருந்தன; அவை இப்போது போர்க்களத்துக்கு வந்து களிறுகள் மாண்டு கிடப்பதைப் பார்க்கின்றன; துயரம் தாங்காமல் புலம்புகின்றன. - பகையரசர்களின் மனைவிமார் எரி மூழ்குவதைக் காணப்பெருத பாண்டியன் தன் ஆடைத் தலைப்பால் கண்ணே மூடிக்கொண்டது போல, அவனுடைய களிறும் பகையரசர் பிடிகளின் வருத்தத்தைக் காணமாட்டா மல் தன் கண்களை மூடிக்கொண்டது; துதிக்கையால் கண்களைப் புதைத்துக்கொண்டதாம். அதற்கும் மனம் இரங்குகிறது. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/128&oldid=619743" இலிருந்து மீள்விக்கப்பட்டது