பக்கம்:முல்லை மணம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 முல்லே மணம்

இளநங்கையின் காதலுக்கு இந்த கியாயம் எல்லாம் தெரியவில்லை. அவள் தன் உள்ளத்தே காதலை வளர்த்துக் கொண்டு வந்தாள். -

ஓரிரண்டு சமயங்களில் தாய் அவளைக் குறிப்பாகக் கண்டித்தாள். 'பேதைப் பெண்ணே, விரலுக்குத் தகுந்த படிதான் வீங்கவேண்டும். வீணே பகற்கனவு கண்டு பொழுது போக்காதே. அவரவர்களுக்கு ஏற்ற கிலேயில் இருந்தால் எப்போதும் கன்மை உண்டு' என்று அறிவுரை

மகளுக்குத் தாய் கூறுவனவெல்லாம் தெளிவாக விளங்கின. அவள் அறிவுடையவளாதலின் தன் கிலேயை யும் சோழன் கிலேயையும் கன்கு தெளிந்தாள். ஆனலும், காதல் என்னும் உணர்ச்சிக்கு இந்தப் பாகுபாடு புரிவதே இல்லை. எத்தனே தடை நேர்ந்தாலும், மேலும் மேலும் கிளர்ந்தெழும் தீயைப் போன்றது அது.

இன்று சோழன் உலா வரப்போகிருன். இந்தச் செய்தி காதில் விழுந்தவுடன் இளங்கையின் உடம்பு ஒரு சுற்றுப் பூரித்துவிட்டது. அவள் முகத்தில் ஒரு புது மலர்ச்சி, கண்களில் ஒரு புதிய ஒளி: பேச்சில் ஒரு தனிச் சிறப்பு: கடையில் ஒரு மிடுக்கு.

தாய் அவள் கிலேயைக் கூர்ந்து நோக்கினுள். இந்தப் பெண் உணர்ச்சி வசத்தால் வீதியிலே வந்து ஏதேனும் உளறிவிடுவாளோ?' என்ற அச்சம் அவளுக்கு உண்டாகி விட்டது. பெண்டிருக்கு உயிரைவிடச் சிறந்தது நாணம். இவ்வளவு காலம் அவள் தன் உள்ளத்தே வளர்த்து வந்த காதல் இன்று அதற்கு உரியவனேக் கண்டால் நான மென்னும் விலங்கைத் தகர்த்துக் கட்டவிழ்ந்து போளுல் என்னுகும்? இதை கினேக்கையில் அன்னேக்கு அச்சம் பெரிதாயிற்று. இந்த எதம் வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று உறுதி பூண்டாள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/132&oldid=619747" இலிருந்து மீள்விக்கப்பட்டது