பக்கம்:முல்லை மணம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 முல்லை மணம்

அணுக்கு ஏது வருமோ, அறிகிலேன். அப்புறம் அடித்துப் புரண்டு அழுதாலும் உயிர் வராது" என்று அந்தச் சிறுமி துடிதுடித்துக் கத்திள்ை.

"என்ன!" அன்னேக்கு ஒன்றும் தோன்றவில்லை.

"உறந்தையர் கோனே இவள் கண்ணுரக் காண வேண்டும். திறவுங்கள் உடனே, கதவை. மற்றவற்றைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இவள் இறந்து விட்டால் பிறகு உண்டாகும் துயரம் பெரியது. தாமதம் வேண் டாம்.”

அந்தத் தோழி கூறுவதாக முத்தொள்ளாயிரத்தில் ஒரு பாட்டு வருகிறது.

திறந்திடுமின் தீயவை பிற்காண்டும்! மாதர்

இறந்து படிற்பெரிதாம் ஏதம்;-உறந்தையர்கோன்

தண்ணுர மார்பின் தமிழ்நர் பெருமானக்

கண்ணுரக் காணக் கதவு.

(தீயவை-திறப்பதனல் உண்டாகும் தீங்குகளே; பின்காண்டும். பின்னலே பார்த்துக் கொள்வோம்; மாதர் - பெண்; ஏதம் . துன்பம் (ஏதம் பெரிதாம்.) உறந்தையர் கோன் - சோழன்; தண்ணுர மார்பின்-குளிர்ந்த சந்தனத்தைப் பூசிய மார்பையுடைய, தமிழ்நர் பெருமானேக் கண்ணுரக் காணக் கதவு திறந்திடுமின் என்று சேர்க்க வேண்டும்.!

பாட்டு, தோழியின் படபடப்பையும் கவலையையும் எடுத்துக் காட்டும் வகையில் அமைந்திருக்கிறது. திறக் திடுமின்!” என்ற சொல்ல முதலில் வைத்தது அவளுடைய வேகத்தை மிகச் சிறப்பாகப் புலப்படுத்துகிறது.

2

வஞ்சி மாநகரம் சேரனது இராசதானி. அங்கேயும் அரசன் உலா வரப் போகிருன். அவனுடைய பேரழகைக் காதால் கேட்ட மடமங்கை ஒருத்தி இன்று கண்ணுலே கண்டு இன்புறலாம் என்று ஆர்வம் கொண்டிருக்கிருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/136&oldid=619751" இலிருந்து மீள்விக்கப்பட்டது