பக்கம்:முல்லை மணம்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133. முல்லை மணம்

பெண்கள் திறக்கவும் தேய்வு பெற்று மாறிய குடுமிகளே உடையன

வாயின.

கண்ணி - தலையில் அணியும் மால்ே; வயமான் - வலிமை

யுள்ள குதிரை; கோதை - சேரன்.)

3

இந்தப் பெண் மதுரையில் வாழ்கிறவள். பாண்டியன் உலா வரப் போகிருன். இவளுடைய தாயும் காவல் காக்கும் இயல்புடையவள். ஆனல், இந்தப் பெண் முதலில் சொன்னவளைப் போல உணர்ச்சியிலே ஆழ்ந்து மயக்கம் போட்டு விழுகிறவள் அல்ல. வஞ்சிமா நகரத்துப் பெண்ணைப் போன்ற துணிச்சற்காரியும் அல்ல. தன் தாயின் சொல்லே மீறுவதற்குத் துணிவு இல்லாதவள். பாண்டியன் பேரழகைக் காணவேண்டும் என்ற ஆசைக்கு அணே போடவும் இயலாதவள். கதவைத் திறக்கவும் கூடாது; பாண்டியனைப் பார்க்கவும் வேண்டும். இதற்கு என்ன வழி? - -

நாலு பேர் காணத் தன் பெண் நடு வீதியில் கின்று பாண்டியனைக் கண்டு உணர்ச்சி வேகத்தில் தன் கிலேயைப் பிறர் அறியச் செய்து விடக்கூடும் என்று அஞ்சியே, அவள் தாய் அவளே வீதியிற் செல்லலாகாது என்று தடுத்துக் கதவைத் தாழிட்டுக்கொண்டாள். "இக்தா, கதவைத் திறக்கக்கூடாது. வீட்டுக்குள்ளேயே இரு; தெரிகிறதா?” என்று அச்சுறுத்தினுள். அப்படியே இருக்கிறேன்” என்று அந்தப் பெண் சொன்னள்,

பாண்டியன் உலா வந்தான். அந்தப் பெண் தன் ஆவலே நிறைவேற்றிக்கொண்டாள். அவள் அறிவு நுட்பம் உடையவள். தன் தாயின் விருப்பத்தின்படியே நடந்துகொண்டாள்; வீட்டுக்கு வெளியே போகவில்லை; கதவையும் திறக்கவில்லை. ஆனல், தன் விருப்பத்தையும் பூர்த்தி செய்துகொண்டாள். எப்படி?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/138&oldid=619753" இலிருந்து மீள்விக்கப்பட்டது