பக்கம்:முல்லை மணம்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 முஸ்லே மணம்

பாண்டிய மன்னனுடைய கன்னலம் காணும்படியாக அந்தக் கதவில் ஒரு துளையிட்டு வைத்தாரே, அவருக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்!”

தோழிக்கு உண்மை விளங்கி விட்டது.

பாண்டியனைக் கண்டு இன்புற்ற மங்கை சொல்வதை - முத்தொள்ளாயிரம் நமக்குச் சொல்கிறது.

காப்புஅடங்கென் றன்னே கடிமனே இற்செறித்து யாப்படங்க ஒடி அடைத்தபின்-மாக்கடுங்கோன் நன்னலம் காணக் கதவம் துாேதொட்டார்க்கு என்னகொல் கைம்மா றிணிை! (இந்தக் காவலுக்குள் அடங்குவாயாக என்று என் தாய் காவல் யுடைய இந்த வீட்டுக்குள்ளே என்னே இருக்கச் செய்து, தாழ் முழுவதையும் செறித்து ஒடிக் கதவை அடைத்த பிறகு, வேக மான குதிரையை புடைய பாண்டியனது நல்ல அழகை நான் காணும்படி, இந்தக் கதவில் துளையைத் துளைத்தவருக்கு நான் செய்யும் கைம்மாறு என்ன?

கடிமனே - காவல்ே யுடைய வீடு; யாப்பு - கட்டும் கருவி, இங்கே தாழ் மா - குதிரையை யுடைய கடுங்கோன் என்பது பாண்டியன் பெயர்; துளே தொட்டார்க்கு - துளையைத் துளைத் தவருக்கு)

அவளுடைய அன்னே, "ஐயோ, பாண்டியன் வரு கிருனே! என் பெண்ணுக்கு என்ன திங்கு வந்து விடுமோ! என்று அஞ்சி ஒடிப் போய்க் கதவை அடைத்தாளாம். ‘யாப்படங்க ஒடி அடைத்தபின் என்பது அந்த வேகத். தைக் காட்டுகிறது. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/140&oldid=619755" இலிருந்து மீள்விக்கப்பட்டது