பக்கம்:முல்லை மணம்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றக் குரவை 189

இந்தத் துறை அமையும்படி பத்துப் பாடல்கள் வருகின்றன. அப்பால் கண்ணகியை ஏத்திப் பாடும் பாடல்கள் உள்ளன. -

'தன் நகிலால் மதுரையை எரித்த கண்ணகிக்குத் தேவர்கள் அவள் தலைவனைக் காட்டிக் கொடுத்த நிலையைப் பாடுவோம். அரசன் முறையினின்றும் வழுவ, மதுரையைத் தியால் தண்டனை பெறும்படி செய்தவளைப் பாடுவோம். அப்படிப் பாடும்போது நம் தலைவனே மணக்கும்படி அருள வேண்டும் என்று வேண்டிக் கொள்வோம்.” இவ்வாறு வேண்ட உரிய காதலனேயே காதலி மணந்து கொண் டாள்" என்று அந்தப் பாடல்கள் முடிவு பெறுகின்றன. இறுதியில் இமயத்தில் வில்பொறித்துக் கொல்லி மலேயை ஆண்ட சேரன் வாழ்க என்ற வாழ்த்தோடு குன்றக் குரவை என்ற முதற்காதை முடிகிறது. -

இந்தக் காதையால் மலேகாட்டு மகளிர் அருவியாடிப் பாடும் வழக்கம் தெரிய வருகிறது. முருகனையும் பத்தினித் தெய்வத்தையும் வழிபடும் மரபும், அந்த வழிபாட்டினல் திருமணம் செய்து கொள்வதற்கு உரியவர்கள் தம் விருப்பம் கிறைவேறப் பெறுவார்கள் என்பதும் புலன கின்றன.

குருவி, கிளி இவற்றை ஒட்டி, அருவியிலும் சுனே யிலும் ரோடி இன்புறுவது மலேகாட்டு மகளிருக்கு இயல்பு. குறிஞ்சி கிலத்தில் முருகனே வழிபடுகையில் தொண்டகம், சிறுபறை என்பவற்றை முழக்குவார்கள். கொம்பு, மணி என்பவற்றையும் ஒலிப்பார்கள். அந்த கிலத்துக்கு உரிய பண் குறிஞ்சி. பூவால் அருச்சித்தலும் புகை காட்டலும் வழிபாட்டு வகைகள். முருகனுக்குப் பூசை போடுகிறவனுக்கு வேலன் என்று பெயர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/145&oldid=619760" இலிருந்து மீள்விக்கப்பட்டது