பக்கம்:முல்லை மணம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியக் கரும்பு

இன்று பொங்கல் திருநாள். கரும்பும் மஞ்சளும் வைத்துக் கதிரவனைப் போற்றும் திருநாள். கரும்பு இனிப்புச் சுவையின் அடையாளம்; வெல்லத்துக்குத் தாய். கற்கண்டும் சர்க்கரையும் கரும்பு இருந்தால்தான் கிடைக்கும். -

கரும்பின் கினேவே இனிக்கிறது. அன்பு உடைய வர்களே, கட்டிக் கரும்பே' என்று சொல்லி, கம் ஆர்வத்தைக் காட்டுகிருேம். கட்டி என்பது கற்கண்டுக்குப் பெயர். கற்கண்டு காய்ச்சுவதற்கு உயர்ந்த வகையான கரும்பு வேண்டும். கட்டிக் கரும்பு என்பது அந்த உயர்ந்த சாதிக் கரும்பைக் குறிக்கும் சொல். பெரியாழ்வார் கண்ண பிரானே, ஆலை நீள் கரும் பன்னவன் தாலோ’ என்று பாடுகிரு.ர்.

நல்ல கிலத்துக்கு அடையாளம் கரும்பும் கெல்லும் விளைவது. 'கிலத்துக் கணியென்ப கெல்லும் கரும்பும்" என்று பழம்புலவர் ஒருவர் பாடுகிருர் வளர்க்கும் வகை யில் கரும்பை வளர்த்து, காவுக்கு இனிய வெல்லத்தையும் சர்க்கரையையும் கற்கண்டையும் தருகிறவர்கள் வாழட்டும். அவர்கள் முயற்சியினுல்தானே இன்று பொங்கல் வைக்க முடிகிறது?

வெல்லம் இல்லாவிட்டால் சர்க்கரைப் பொங்கல் எங்கிருந்து வரும்? -

\,

1. பொங்கலன்று வெளியான கட்டுரை இது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/18&oldid=619608" இலிருந்து மீள்விக்கப்பட்டது