பக்கம்:முல்லை மணம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4 முல்ல மணம்

கிகழ்ந்தது என்று சொல்லுகிருர் மாணிக்க வாசகர். எங்கோ எப்பொழுதோ நிகழ்ந்தது அன்று இது. அவர் சொந்த அதுபவத்திலே உணர்ந்தது. வேறு சாட்சி வேண்டுமா? - -

தம்முடைய மனமாகிய இரும்பிலே இறைவன் தன் திருவடியாகிய கரும்பின் சுவையைக் காட்டினன் என்று பாடுகிருர். இரும்பின் தன்மையைத் தரும் மனத்தை யுடைய என்னே இழுத்து இழுத்து, என் எலும்பு உருகும் படியாகச் செய்து, கரும்பு தருகின்ற சுவையைக் காட்டி யதுபோல் உன் பொன்னடிகளைக் காட்டினேயே!” என்று போற்று கிரு.ர். - -

இரும்புதரு மனத்தேனே

ஈர்த்தீர்த்துஎன் என்பு:உருக்கி கரும்புதரு சுவைஎனக்குக்

காட்டினேஉன் பொன்னடிகள்.'

ஒரு ஞானி. அவர் சிறு பிராயத்திலிருந்தே இறைவனே வழிபடுகிறவர். ஆசையை அடக்கி யோகம் பயில்பவர். இந்தப் பிறவி எடுத்ததன் பயன் எதுவோ அதைப் பெற்று விட்டவர். அவருக்கு மரணத்தைப் பற்றிச் சிறிதும் கவலேயே இல்லே. -

அடுத்த வீட்டில் ஒருவன் இருக்கிருன்; முதிர்ந்த வயசு, வியாதியாகப் படுத்துக் கிடக்கிருன். பலகாலமாக வாழ்க் கையில் இன்பம் அநுபவித்தோமே, இதுபோதும் என்று அவன் நினைக்கவில்லை. 'இன்னும் வாழவேண்டும்; வாழ்க் கையை அநுபவிக்க வேண்டும் என்ற ஆசை பெருகிக் கொண்டே இருக்கிறது. அதல்ை சாவைக் கண்டு அவன் பயப்படுகிருன், - -

1. திருவாசகம், திகுவேசறவு, 1.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/20&oldid=619613" இலிருந்து மீள்விக்கப்பட்டது