பக்கம்:முல்லை மணம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 - முல்லை மணம்

பிறகு தனியாக இருந்த அவருக்குத் துயரம் பெருகியது. மரணம் முறைப்படி வருவதாக இருந்தால் ஒன்று மேலிருந்து கீழ் வரவேண்டும்; அப்போது என் தமையனர் இறந்த பின் நான் இறக்க, பின் என் தம்பி இறக்க வேண் டும். இல்லையானல் கீழிருந்து மேலே போகவேண்டும். முதலில் என் தம்பி இறந்தான். பின்பு நான் இறந்திருக்க வேண்டும். பிறகுதான் என் தமையனர் இறக்கவேண்டும். இந்த இரண்டு முறையிலும்சேராமல் தம்பி முன் இறக்கத் தமையனர் பின்பு இறக்க கான் மொட்டை மரமாக கிற் கிறேன் என்று அவர் அளவிலாத வருத்தம் அடைந்தார்.

'என் தம்பியும் பெரும்புலவன். அண்ணுவோ கவிதா சார்வபெளமர். அவர்கள் இருவரும் போன பிறகு கான் இருந்து என்ன பயன்? கருப்பங்கழியை வெட்டித் தின் பவர்கள் மேற்கழியையும் கீழ்க் கழியையும் வெட்டிக் கொண்டு கணுவைப் போட்டுவிடுவது போலத் தெய்வம், மதிப்புள்ள என் சகோதரர் இருவரையும் தன் திருவடி யிலே சேர்த்துக்கொண்டு, என்னை மட்டும் ஒதுக்கிவிட்டது. நான் கரும்பில் உள்ள கணுவைப்போல இருக்கிறேன்!” என்று புலம்பினர். அந்த வருத்தம் பாடலாக மாறி வெளியாயிற்று.

யாரோ ஒரு பெண் அவரைப் பார்த்து, 'உங்கள் அண்ணனும் தம்பியும் எங்கே?' என்று கேட்க, விடை சொல்வது போல அமைந்திருக்கிறது பாட்டு.

அல்லிமலர்ப் பண்ணவனும் ஆராய்ந் தறிகவிதை சொல்லும் இருவரிடைத் தோன்றியயான்-முல்லை அரும்பிற் பொலியும் அணிமுறுவல் நல்லாய், கரும்பிற் கணுநிகர்த்தேன் காண்! - -

(அல்லிமலர் - அக இதழ்களையுடைய தாமரை மலரில் இருக் கிற; பண்ணவன் - பிரமன், முல்லே அரும்பைப் போல விளங் கும் அழகையுடைய பல் வரிசைகளையுடைய பெண்ணே.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/24&oldid=619621" இலிருந்து மீள்விக்கப்பட்டது