பக்கம்:முல்லை மணம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£6 gsడిటి மணம்

ஓர் இல் நெய்தல் கறங்க, ஒர் இல் ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப் புணர்ந்தோர் பூஅணி அணியப் பிரிந்தோர் பைதல் உண்கண் பணிவார்பு உறைப்பப் படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்! இன்னுது அம்மஇவ் வுலகம்! இனிய காண்க.இதன் இயல்புணர்ந் தோரே." (ஒரு வீட்டில் இழவுப்பறை கொட்ட, மற்றெரு வீட்டில் குளிர்ந்த முழவின் ஒசை முழங்க, ஒரு வீட்டில் கணவளுேடு: சேர்ந்தவர்கள் பூவில்ை அழகுபடுத்திக்கொள்ள, கணவனேப் பிரிந்தோர் துன்பத்தையுடைய மையுண்ட கண்கள் நீர்த் துளியை ஒழுகவிட, இப்படி அமையும்படி படைத்து விட்டான், நிச்சயமாகக் குணமில்லாத அந்தப் பிரமன். இந்த உலகம் துன்பமயமானது. இதன் இயல்பை உணர்ந்த அறிஞர்கள் இனிமை பெறுவதற்குரிய காரியங்களேச் செய்வார்களாக)

புலவருக்கு நான்முகன் பால் ஆத்திரம்; அவனைப் பண் பிலாளன் என்று வைகிரு.ர்.

责 திருவள்ளுவரிடங்கூட வசவு கேட்ட பெருமை அந்த நான்முகனுக்கு உண்டு. பணக்காரர்களும் ஏழைகளும் கலந்து வாழ்வது உலகம். சிலர் பிச்சை எடுத்து வாழ்கிருர் கள். தொழில் செய்து பிழைக்கலாம். கைகால்கள் நன்ருக இருந்தும் பிச்சை எடுத்து வாழ்கிருர்கள். ஏன் அவர்கள் அப்படி வாழவேண்டும்? 'இது உலக நியதி' என்று ஒருவன் சொன்னன். "பிரமன் விதித்த விதி" என்று மற்ருெருவன் சொன்னன். - . இதைக் கேட்டார் திருவள்ளுவர். 'என்ன? பிறரிடம் பிச்சை வாங்கி, உயிர் வாழும்படியாக உலகத்தைப் படைத்தவன் செய்கிருன் என்ரு சொல்கிருய்? அப்படி யானுல் அந்தப் பிரமன் நாசமாகப் போகட்டும். இந்த

1. புறநானுாறு. 194.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/32&oldid=619638" இலிருந்து மீள்விக்கப்பட்டது