பக்கம்:முல்லை மணம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரமனுக்குச் சாபம் 3?

ஏழைகளைப் போலவே அவனும் ஊரெல்லாம் திரிந்து கெடட்டும்” என்று கோபத்தோடு சாபம் இட்டார். 'இன்மை என ஒரு பாவி என்று வறுமையைக் கண்டால் குமுறும் உள்ளம் படைத்தவர் அல்லவா அவர்? இரந்தும் உயிர்வாழ வேண்டின், பரந்து கெடுக உலகியற்றி யான்.' - 女 ஒளவைப் பாட்டி ஒரு வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். உலகமெல்லாம் போற்றும் அந்தப் பெருமாட்டியைக் கண்டு எழுந்து புன்னகை பூத்து வரவேற்ருள் அந்த வீட்டில் இருந்த பெண்மணி. பாட்டிக்கு வேண்டிய உணவு கொடுக்க எண்ணினுள் அவள். ஆளுல் எண்ணியபடி செய்ய வகையின்றி மிரள மிரள விழித்தாள். மானப் போல மருண்டாள். அந்த வீட்டில் உரிமையில்லாதவளேப் போலத் தோன்றினுள்.

"ஏன் அம்மா, இந்த வீட்டில் இருப்பவள்தானே கீ?" என்று பாட்டி கேட்டாள்.

"ஆம்" என்ருள் அந்த கங்கை. "உன் கணவன் வெளியில் போயிருக்கிருனே?” என்ருள் பாட்டி. -

ஆம்” என்ருள் அவள். .

"கிறிது வீட்டுக்குள்ளே வந்து குக்தலாமா?’ என்று ஒளவை கேட்டாள். - - - அந்தப் பெண்மணி மலங்க மலங்க விழித்தாள். அதற்குள் ஒர் ஆடவன் அங்கே வந்தான். அவளைச் சுடுவதுபோல விழித்துப் பார்த்தான்; “இங்கே ஏன் நிற்கிருய், சோம்பேறி?” என்று தன் முரட்டுக் கரத்தால் பளிர் பளிர் என்று அறைந்தான். பாவம்! அந்த மானனேய

1. பரந்து - கிரிந்து உலகு இயற்றியான் . உலகத்தைப் படைத்த பிரமன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/33&oldid=619640" இலிருந்து மீள்விக்கப்பட்டது