பக்கம்:முல்லை மணம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக அரங்கு ら5

உலகமாகிய நாடக அரங்கில் உயிர் கோலம் புனைந்து ஆடும் வாழ்க்கைக் கூத்தை இளங்கோவடிகள் சிலப்பதிகா ரத்தில் காட்டும் வகை இது.

- #

மணிமேகலையிலும் இந்தக் கருத்தை ஓரிடத்தில் காண் கிருேம். அறவண வடிகளின்முன் மாதவியும் சுதமதியும் மணிமேகலையும் நிற்கிருர்கள். முற்பிறப்பில் அம்மூவரும் சகோதரிகளாக இருந்தவர்கள். மணிமேகலை தன் முற் பிறப்புச் செய்தியை மணி பல்லவத்தில் இருந்த புத்த பீடிகைக் காட்சியால் அறிந்தாள். பின்னும் பழைய செய்திகளை அறவண வடிகள் வாயிலாகத் தெரிந்து அறங் கேட்க வந்திருக்கிருள். முற்பிறப்பில் சகோதரிகளாக இருந்த மூவரும் இப்பிறப்பில் தாய், தோழி, மகளாக வந்திருக்கிருர்கள். அறவணவடிகள் அவர்களேக் கண்ட வுடன், நல்ல கோலம் புனேந்திருக்கிறீர்கள் சென்ற பிறவியிலே அணிந்த கோலம் வேறு, இப்போது கொண்ட கோலம் வேறு. நாடகம் ஆடும் மகளிரைப் போல அல் லவோ இருக்கிறீர்கள்?' என்று வாழ்க்கைக் கூத்தையும் உலகமாகிய நாடக மேடையையும் கினேவுறுத்துகிருர் அறவண வடிகள்.

ஆடும் கூத்தியர் அணியே போல வேற்ருர் அணியொடு வந்தீரோ ?

என்று அவர் பேசுகிரு.ர். -

வாழ்க்கையென்னும் கூத்தை ஆடும் உயிராகிய கூத்தன் வெவ்வேறு கோலம் கொண்டு இயங்கும் நாடக மேடையாக உலகம் இருக்கிறது. நாடகத்தை கடிக்கும் நாம் பிறர் நடிப்பதையும் பார்க்கிருேம். ஒவ்வொருவர் வாழ்க் கையும் ஒவ்வொரு பெரிய நாடகத்தின் சிறு சிறுபகுதி. இந்தக் கூத்தை யாடுகிற உயிர்கள் காடக மேடையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/41&oldid=619653" இலிருந்து மீள்விக்கப்பட்டது