பக்கம்:முல்லை மணம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 - முல்ல மணம்

அவனுக்கு அளவற்ற மகிழ்ச்சி உண்டாயிற்ரும். தன் கண்பனுக்குத் தன் செல்வத்தால் உபகாரம் செய்வதை விடத் தன் கையால் செய்யும் உபசாரம் அவனுக்கு உயர் வாக இருந்தது. அடியை வருடித் துரங்கப் பண்ணு கிருன்.

வழிநடந் திளேத்த வேஇம் மலர் அடி இரண்டு மென்று கழிமகிழ் சிறப்ப மெல்ல வருடின்ை கமலக் கண்ணன் என்பது குசேலோபாக்கியானம்.

அடி வருடித் துயிலப் பண்ணும் கலேயில் முருகனும் கண்ணனும் சிறந்தவர்கள் போலும் !

  1. . இதுவரையில் மக்களுலக நிகழ்ச்சிகளைப் பார்த் தோம். மக்களின் வாழ்வை இயற்கையும் கடத்திக் காட்டு வதாகக் கவி புனைதல் கவிஞர் இயல்பு. மக்கள் வாழ்க் கையைக் கண்டு தம் உணர்ச்சியைக் காட்டுவதாகவும், மக்களைப் போலவே செயல் புரிவதாகவும் சொல்வது கற்பனையின் வகைகள். இந்தத் திறம் எல்ல மொழிகளி அலும் உண்டு.

திருநெறித் தமிழ் பாடிய நால்வர்களில் திருஞான சம்பந்தர் இயற்கை யெழிலப் பாடுவதில் வல்லவர்; முத் தமிழ் விரகர் என்னும் சிறப்புக்குரியவர். இயற்கைக் ாட்சிகளைக் கற்பனையும் தன்மை நவிற்சியும் அமையப் பாடுபவர் அவர்.

அடி வருடித் துயில்கொள்ளும் அன்பு வாழ்வை அவர் இயற்கையிலே காணுகிருர் மருத கில வளத்தைப் பாடும் போது அப்படி ஒரு காட்சியை அமைக்கிருர்,

மருதத் தெய்வத்தின் தனியரசுப் பீடமாக விளங்குவது சோழ நாடு. அங்கே திருவையாறு சிறந்த தலம்; இயற்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/46&oldid=619658" இலிருந்து மீள்விக்கப்பட்டது