பக்கம்:முல்லை மணம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 முல்லை மணம்

இவ்வளவு சிறப்புடையவர் யார் ? நல்ல தேன் சிரம்பி யிருக்கும் மலர்களில் பாய்ந்து அங்குள்ள மனத்தை வாரிக் கொண்டுவந்து தென்றலார் அடிவருடுகிருர். தென்றலுக்கு மென்மை இல்லையென்று யார் சொல்வார்கள் ? அதற்கு மந்தமாருதம் என்ற பெயர் இருப்பது தெரியாதா? தென் றல் வீசினல் தூக்கம் வரக் கேட்கவேண்டுமா?

வானமே விதானமாக வயலே மெத்தையாகக் குயில் கள் பாடப் பாட, தென்றலார் அடிவருட, செழுங் கரும் பாகிய செல்லக் குழந்தை தூங்குகிறது. புரமூன்றையும் எரித்த சிலையாளி வாழும் தலம், தென்றலார் அடிவருடச் செழுங் கரும்பு கண் வளரும் திருவையாறு. .

நின்றுலாம் நெடுவிசும்பில் நெருக்கிவரு

புரம்மூன்றும் நீள்வாய் அம்பு சென்றுலாம் படிதொட்ட சிலையாளி

மலையாளி சேரும் கோயில் குன்றெலாம் குயில்கூவக் கொழும்பிரச மலர்பாய்ந்து வாசம் மல்கு தென்றலார் அடிவருடச் செழுங்கரும்பு

கண்வளரும் திருவை யாறே.

(விசும்பில் - வானத்தில்; தொட்ட - தொடுத்த, சிலையாளி - வில்லேயுடையவன்; பிரசம் - தேன்.)

அடி வருடினல் கண்வளரும் இயல்பைக் கரும்பினிடம் காட்டினர் சம்பந்தர். - -

- ஒருவர் மனம் மகிழவேண்டுமானல், அவர் காலப் பிடித்துக் கையைப் பிடித்துப் பணி செய்வது உலகியல். காலப் பிடிப்பதும் கையைப் பிடிப்பதும் இகளப்பை ஆற்றி அமைதியைத் தரும் செயல்கள். செல்வர்கள் அவற்றைச் செய்வதற்கு ஏவலாளர்களே வைத்திருப்பார்கள். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/48&oldid=619660" இலிருந்து மீள்விக்கப்பட்டது