பக்கம்:முல்லை மணம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 முல்லே மணம்

அவர்கள் புக முடியாது. வண்டும் தென்றலும் வருவ தற்காக அமைந்த வாயில்களைப் போலச் சாளரங்கள் அழகுடன் திகழ்கின்றன.

அந்தச் சாளரத்தினூடே செவ்வி பார்த்து வண்டைத் துஆனயாகக் கொண்டு மணம் நிரம்பிய தென்றல் புகு கிறது.

峨 脚 角的 衅 曲 அயற்பூ மேதகு தாழை விரியல்வெண் தோட்டுக் கோதை மாதவி சண்பகப் பொதும்பர்த் தாதுதேர்ந் துண்டு மாதர்வாள் முகத்துப் புரிகுழல் அசைத்துப் புகல்ஏக் கற்றுத் திரிதரு சுரும்பொடு செவ்வி பார்த்து மாலைத் தாமத்து மணிநிரைத்து வகுத்த கோலச் சாளரக் குறுங்கண் நுழைந்து வண்டொடு புக்க மணவாய்த் தென்றல். |அயற்பூவயலில் நீரிலே பூக்கின்ற மலர்கள் அல்லாத வேறு பூக்கள்; விரியல் - விரிதலையுடைய, தோடு - மடல்; கோதை மாதவி . மாலே போலப் பூக்கும் குருக்கத்தி பொதும்பர் - மரம்; அளகம் . முன்னுச்சி மயிர்; புகல் ஏக்கற்று - புகுதலுக்கு ஏங்கி; செவ்வி . சந்தர்ப்பம்; மாலேத் தாமம் - வரிசையான மா8ல.)

女 வசந்த காலம் வந்துவிட்டது. வசந்தன் மன்மதனுக் குத் தோழன். மன்னன் வருகையைச் சின்னம் ஊதித் தெரிவிப்பது வழக்கம். காமனுக்குச் சின்னம் அல்லது காகளமாக இருப்பது குயில். -

- - இளவேனில் வந்தது. தென்றல் வீசியது. அதுகாறும் வாய் முடியிருந்த குயில் குரல் எழுப்பிப் பாடத் தொடங் கியது. இதை அழகாக வருணிக்கிருர் இளங்கோவடிகள். உலகத்தில் எங்கும் அரசு வீற்றிருப்பவன் மன்மதன். அவனுடைய தோழன் வந்து தாண்டினல் அவன் படைக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/54&oldid=619667" இலிருந்து மீள்விக்கப்பட்டது