பக்கம்:முல்லை மணம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 முல்லே மணம்

வில்லையா? பொதியிலிலிருந்து வருகிற தென்றல் என்ரு இதை கினேக்கிறீர்கள்? இது மதுரைத் தென்றல். புலவர் செங்காவிலே பொருந்திய வீறுடைய தென்றல். இது எப்ப டித் தெரிகிறது என்ரு கேட்கிறீர்கள்? பொதியில் தென்ற லில் அங்த மலையில் உள்ள மணந்தான் வீசும், இதில் மதுரையிலுள்ள மணங்கள் எல்லாம் வீசுகின்றனவே! சிறிது கூர்ந்து கவனியுங்கள்' என்கிரு.ர்கள்.

"இதோ, இப்போது பாருங்கள்; அகிற்குழம்பின் மனம் தெரிகிறதா? குங்குமக் கலவையின் மணம் தெரி கிறதா? இருங்கள், இதோ, இதுதான் சவ்வாது வாசனே. இது குளிர்ச்சியாக இருக்கிறதல்லவா? இதுதான் சந்தன நறுமணம். இது கஸ்துாரி. இத்தனே குழம்புகளில் விளையாடிவிட்டு இந்தத் தென்றல் வருகிறது. இவ்வளவும் பொதியிலில் ஏது? வளங்கெழுமிய மதுரையில்தான் ஒருங்கே இருப்பதைக் காணலாம்."

காழ் அகிற் சாந்தம், கமழ்பூங் குங்குமம், நாவிக் குழம்பு, நலங்கொள் தேய்வை, மான்மதச் சாந்தம், மணங்கமழ் தெய்வத் தேமென் கொழுஞ்சே ருடி. மதுரைத் தென்றல் வந்தது காணரீர்! (காழ் - வைரமுடைய காவி - சவ்வாது, தேய்வை - அரைத்த சந்தனம்; மான்மதம் - கஸ்தூரி.) -

இவற்ருேடு நிற்கவில்லை; இந்த மணப் பொருள்கள் வெளியிலிருந்து வந்த சரக்குகளே அரைத்து அமைத்தவை. மதுரையில் அங்கங்கே சிறுபொழில்கள் இருக்கின்றன. வீடுகளில் மல்லிகை, முல்லே முதலிய கொடிகளே வளர்க் கிருர்கள். அந்த மலர்களின் மணத்தையும் அளந்து வருகிறது மதுரைத் தென்றல். அதில் காது சேர்ந்த கழுநீர் மணம் வீசுகிறது. சண்பகமாலேயின் கறுமணம் கலந்திருக் கிறது. மனேயில்ே வளரும் மாதவி என்ன, மல்லிகை என்ன,

1. കാ. 18:116-82. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/56&oldid=619669" இலிருந்து மீள்விக்கப்பட்டது