பக்கம்:முல்லை மணம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நரைத் தூது

பழைய காலம் அது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் என்று சொல்லலாம். உண்மையைச் சொல்லும் புலவர்கள் இருந்த காலம். நரி வெரூஉத் தலையார் என்று ஒரு புலவர் இருந்தார். அவர் தலையைக் கண்டு கரி அஞ்சிய தாம். அவர் பாண்டியனையும் சோழனையும் சேரனேயும் பார்த்துப் பழகியவர். ஏழைகளிடமும் செல்வர்களிடமும் பழகி, இரு சாரார் இயல்புகளேயும் அறிகிறவர். அரசர் களின் அவைக் களத்தில் உள்ள மக்கள் பல்வேறு இயல்பு டையவர்களாக இருப்பதை கன்கு உணர்ந்தவர்.

அரசனுடன் பழகி, அவனுக்கு அறிவுரை கூறும் அமைச்சரும் சான்ருேரும் ஒழுக்கத்தில் சிறந்து, அரச னுக்கு நல்ல நெறி காட்டினல் யாவருக்கும் நலம் உண்டா கும். அரசன் தகாத வழியில் சென்ருல், தம்முடைய ஒழுக்கச் சிறப்பாகிய பலத்தில்ை, அஞ்சாமல் அவனே இடித்துரைத்து கல்வழிப்படுத்த வேண்டும். இன்ன இன்ன துறையில் இறங்கினல் இன்ன இன்ன நலக் தீங்குகள் உண்டாகும் என்று அறிவிலுைம் அநுபவத்தி குலும் ஆராய்ந்து உரைக்கவேண்டும்.

இத்தகைய இயல்புகளுடன் எல்லாரும் இருக்கிருர் களா? சில அவைக் களங்களில் அமைச்சர்கள் இருக் தார்கள். சான்ருேர்கள் என்று பிறர் தம்மை மதிக்க வேண்டுமென்று வற்புறுத்தி மதிப்புப் பெறுபவர்களும் இருந்தார்கள். அரசன் எது சொன்னலும், அதன் கன்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/60&oldid=619673" இலிருந்து மீள்விக்கப்பட்டது