பக்கம்:முல்லை மணம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவண ஒல

பழங்காலத்தில் தமிழ் காட்டில் ஒலேகளில் எழுதி வந்தார்கள் என்பது யாவரும் அறிந்தது. தமிழ் நூல்கள் யாவும் ஏட்டுச் சுவடிகளில் இருந்தன. ஓலேயை வாரி, எழுத்தாணியால் எழுதும் வழக்கம் இளம் பருவத்தி லிருந்தே தமிழ் மக்களுக்கு அமைந்தது.

வெண்பா இருகாலிற் கல்லானே வெள்ளோலே கண்பார்க்கக் கையால் எழுதானேப்-பெண்பாவி பெற்ருளே பெற்ருள் பிறர்நகைக்கப் பெற்ருளே எற்ருேமற் றெற்ருேமற் றெற்று'

என்ற வெண்பா, ஓலேயில் எழுதத் தெரியாத மகனே இழித்துக் கூறுகின்றது. .

நூல்களை எழுதுவதோடு யாருக்கேனும் செய்தி எழுதி விடுப்பதற்கும் ஒலேயையே பயன்படுத்தினர்கள். பல ஒல களைக் கயிற்ரும் கோத்து வைத்ததற்குச் சுவடி யென்றும், தனி ஒலைக்கு ஒலே யென்றும் பெயர்கள் வழங்கின. பெரும் பாலும் ஒருவருக்கு மற்ருெருவர் செய்தி அனுப்பும்போது ஒலேகளில் எழுதி விடுத்தமையால் திருமுகங்களுக்கு ஓலை என்பது காரணப் பெயராக அமைந்துவிட்டது. அரசர்கள் தம்முடைய கட்டளேகளே எழுதி அனுப்புவதற்கும் ஒல களே பயன்பட்டன. அது சம்பந்தமான பணிபுரிபவ னுக்குத் திருமந்திர ஒலே என்ற பெயர் இருந்தது. புலவர்கள் கவியுருவில் முடங்கல் தீட்டினல் அதற்குச் சீட்டுக் கவி

என்றும் ஒலேத் துரக்கு என்றும் பெயர்கள் வழங்கின. -

1. ஒளவையார் பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/67&oldid=619680" இலிருந்து மீள்விக்கப்பட்டது