பக்கம்:முல்லை மணம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 முல்லே மணம்

அந்த ஒலேயில் சுந்தரருடைய பாட்டனர், தாமும் தம் பரம்பரையினரும் வெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக்கு அடிமை என்று எழுதிக் கையெழுத்திட்டிருந்தார். அதோடு அதற்குச் சாட்சியாகப் பலர் மேலெழுத்திட்டிருந் தார்கள். அவற்றை யெல்லாம் கரணத்தான் வாசிக்கச் சபையிலிருந்த பெரியவர்கள் கேட்டார்கள். பின்பு, இந்த எழுத்து உம்முடைய பாட்டனர் எழுத்துத்தான? பார்த்து அறியும் ” என்று அவர்கள் சுந்தரரிடம் கூற, அவரை ஆட்கொள்ள வந்த வள்ளல், ' இவனுடைய பாட்டனர் கையெழுத்துள்ள வேறு ஏதேனும் இருந்தால் கொணர்ந்து நீங்களே ஒப்பு நோக்கிப் பார்த்துச் சொல் லுங்கள் ' என்ருர்.

அதன்படியே அவையில் இருந்த மறையோர் சுந்தர ருடைய பாட்டனர் எழுதிய ஒலேயை ஆவணக் களரியி விருந்து வருவித்து ஒப்புநோக்கிப் பார்க்க, இரண்டும் ஒத்திருந்ததைக் கண்டு, முதியவர் கூறுவது உண்மையே என்று ஒப்புக்கொண்டனர். - -

திரண்டமா மறையோர் தாமும்

திருநாவ லூரர் கோமுன் மருண்டது தெளிய, மற்ற

மறையவன் எழுத்தால் ஒலே அரண்தரு காப்பில் வேருென்

றழைத்துடன் ஒப்பு நோக்கி இரண்டும்ஒத் திருந்த தென்னே,

இனிச்செயல் இல்லை என்றர். இதில் சுந்தரருடைய பாட்டனர் தம் கையால் எழுதிய வேருேர் ஒலையை அரண்தரு காப்' பிலிருந்து வருவித்தார்கள் என்ற செய்தி வருகிறது. அந்த அரண் தரு காப்பு ' என்பது ஆவணக் களரியைக் குறிக்கிறது.

1. பெரிய தடுத்தாட்கொண்ட 62.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/70&oldid=619683" இலிருந்து மீள்விக்கப்பட்டது