பக்கம்:முல்லை மணம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவண జ్ఞాడిe 69

வேண்டும். சுந்தரர் வரலாற்றில், காப்பிலிருந்து கொணர்ந்த ஒலையைக் கரணத்தான் பிரித்துப் பார்த்த செய்தி வருவது இங்கே கினைப்பதற்குரியது.

கயிறுபிணிக் குழிசி ஓலே கொண்மார் பொறிகண்டு அழிக்கும் ஆவன மாக்களின் உயிர்திறம் பெயர நல்லமர்க் கடந்த தறுக ணுளர் குடர்தரீஇத் தெறுவரச் - செஞ்செவி யெருவை அஞ்சுவர இகுக்கும்.' என்று உவமையையும் பொருளேயும் ஒருசேரப் பார்த்தால் ஆவண மாக்களின் செயல் நன்கு புலகுைம். எருவைகள் குடலேப் பிடுங்கி ஒவ்வொன்முக வெளியே இடுகின்றன. ஆவணமாக்களும் ஒவ்வொன்ருகக் குடத்திலிருந்து ஒலயை வாங்கிப் பார்த்துப் போடுகிருர்கள். --

உவமையாக எடுத்தாளும் நிகழ்ச்சி பலரும் அறிந்த தாக இருப்பது இயல்பு. ஆதலின் ஆவணத்தை ஆராயும். செயல் பழந்தமிழ் நாட்டினருக்கு கன்முகத் தெரிந்த தென்றே கொள்ளவேண்டும்.

ஆவண ஒலே எழுதுதலும், அதனைப் பாதுகாத்தலும், வேண்டும்பொழுது ஒப்புகோக்கிப் பார்ப்பதுமாகிய இந்தச் செய்திகளேக் கல்வெட்டுக்களிலிருந்து அறிவதோடு, பெரிய புராணம், அகநானூறு என்ற இலக்கியங்களிலிருந்தும் அறிய முடிகிறது. அவற்ருல், தமிழர் வாழ்வில் நெடுங்கால மாக இத்தகைய கல்ல வழக்கங்கள் இருந்து வந்தன என் பதை உணர்கிருேம்.

1. அகநானூறு. 7.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/75&oldid=619688" இலிருந்து மீள்விக்கப்பட்டது