பக்கம்:முல்லை மணம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 முல்லை மணம்

பொங்கிய நகுலன் வாளால்

பொடிபடப் போகும் - என்ன அங்கவன் விரல்ஒன் ருக

ஆவியும் விட்ட தன்றே. (தண்டு - கதாயுதம்; அயன் விஞ்சை - பிரம்ம தேவனின் மந்திரம்.)

இந்தப் பாடல்கள் தனியே வாய்மொழியாக வழங்கு கின்றன. இவை நல்ல நடையில் இலக்கண வழுவின்றி அமையவில்லை. ஆயினும், இக்காட்டில் வழங்கும் கதையைத் தம்முள்ளே பொதிந்து வைத்திருக்கின்றன.

தமக்கு எவையேனும் குறைகள் இருப்பின் இறந்து போகும்போது கை விரல்கள் மடங்கி யிருக்கும் என்ற உண்மையை வேறு ஒரு வரலாறும் தெரிவிக்கிறது. ரீ வைஷ்ணவ ஞானசிரிய பரம்பரையைச் சேர்ந்த ஆளவந்தா ருடைய வரலாற்றில் இந் நிகழ்ச்சி வருகிறது.

வைஷ்ணவ ஆசாரியராகிய ரீ இராமாநுசர் துறவி யாவதற்கு முன் இளேயாழ்வார் என்ற திருநாமத்தோடு இருந்தார். அவருக்கு ஆளவந்தாரைத் தரிசனம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. அதன் பொருட்டுப் பெரிய கம்பியுடன் சென்றபோது, ஆள வந்தார் பரமபதத்துக்கு எழுந்தருளிவிட்டார் என்ற செய்தி தெரின் தது. அந்த நிகழ்ச்சி அப்போதுதான் கடந்தது; ஆதலின், அவருடைய திருவுருவத்தையேனும் தரிசித்துக்கொள்ள லாம் என்று இளேயாழ்வார் போனர். போய் ஆளவந்தா ருடைய திருமேனி முழுவதையும் பேராவலுடன் பார்த்

இப் பாடல்களே எனக்கு அருள் கூர்ந்து தெரிவித்தவர்கள்

வடகுமரையில் இருக்கும் துறவியாகிய நீலது அப்பண்ண சுவாமிகள் அவர்கள். . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/88&oldid=619702" இலிருந்து மீள்விக்கப்பட்டது