பக்கம்:முல்லை மணம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{}{} முல்லை மனம்

அன்று எங்கள் வீட்டில் ஒரு பெரியவர் விருந்தாளி' யாக வந்தார். அவருடன் கான் இருந்து உண்டேன். அவர் செய்த செயலே இந்தப் பாட்டின் பொருளேத் தெளிய வைத்தது. அந்தச் செயல் கான் அறியாததன்று. ஆலுைம் அன்று அவர் செயல் உடனே இந்தப் பாட்டை கினேக்கச் செய்தது.

உணவு முடிந்த பின் எங்கள் மரபின்படி சிறிதளவு தண்ணிரை உள்ளங் கையால் வாங்கி உறிஞ்சிவிட்டு: எழுவது வழக்கம். அதை 'உத்தராபோசனம்' என்று சொல்வார்கள். உத்தரா போசனம் வாங்கிக்கொண்ட பிறகு ஈரக் கையை இலக்கருகில் தரையில் அழுத்திவிட்டு, ‘விருந்தளித்தவன் சுகம் பெறட்டும் என்று சொல்வது வழக்கம். கையில் உள்ள ஈரத்தால் கரையில் கைச்சுவடு நன்ருகப் பதியும். விரல்களேச் சேர்த்துக் கையைத் தரையில் வைத்துப் பின்பு அப் பெரியவர் எழுந்தார்.

வளையாபதியில் வரும் செயல்-தொகுத்து விரல் வைப்பது-இதுவாகத்தான் இருக்கவேண்டும் என்று ஊகித்தேன். எதையேனும் உறுதியாகச் சொல்லவேண்டு மானுல் தரையில் அடித்துப் பேசுவதுண்டல்லவா? அதுவும். இப்போது கினேவுக்கு வந்தது. வளையாபதியில் வரும் நிகழ்ச்சி என் அகக்கண் முன் கின்றது. -

பல வகையான அறங்களேச் செய்யும் ஈகையாளன் ஒருவனுடைய வீட்டுக்கு ஒரு பெரியவர் போனர். அவன் செய்யும் அறங்களேயெல்லாம் கண்டு மகிழ்ந்தார். பசித். தோருக்கு வயிருர உணவு வழங்கும் அறத்தையும் அந்தச் செல்வன் செய்தான். அந்தப் பெரியவர் அவன் வீட்டில் உணவு கொண்டார். உண்ட பிறகு, எழும்போது தம் கைவிரல்களைச் சேர்த்து இலக்கருகில் அறைவது போல வைத்துவிட்டு எழுந்தார். அப்படிச் செய்ததற்கு என்ன காரணம் என்று விருந்தளித்த செல்வன் யோசித்தான்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/96&oldid=619710" இலிருந்து மீள்விக்கப்பட்டது