பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 - முல்லைப் பாட்டு

தொங்கவிட்டுக் கண்ட, ஒப்பனை செய்யப்பட்ட, மாட்சிமை மிக்க, நல்ல இல்லத்தில், அழகிய சிறந்த மாணிக்கமாகிய விளக்கை எரிய வைத்து, வலிய கயிற்றினால், திரையை வளைத்து ஆக்கிய, அரசன், ஐம்பெருங்குழுவோடிருந்து ஆய்வதற்காக ஒர் அறை, அவன் தனித்து இருப்பதற்கான ஒர் அறை என்ற இரு அறைகளாகப் பிரிக்கப்பட்ட அறைகள் இரண்டில், அரசன் இருக்கும் உள் அறையுள், தம் உள்ளத்தே எழும் உணர்வுகளை வாய் திறந்து சொல்லால் உரைக்க மாட்டாமல், குறிப்பினாலேயே உரைக்கக் கூடியவனாகிய ஊமையரும், சட்டை இட்டவரும் ஆகிய அரபு நாட்டிலிருந்து தமிழகம் வந்து வாழும் மிலேச்சராகிய துருக்கர். அரசர்க்குப் பணிபுரிந்து கிடந்தனர்;

காட்டுப் பா ச ைறக் க ண், யானைப் பாகரும், யவனர்களும், மெய்க்காப்பாளரும், ஏவலாளரும், விளக்கேற்றும் மகளிரும், மிலேச்சரும், அவ்வாறு பணி புரிந்திருக்க, தனக்கென வகுத் திருந்த தனி அறையில் உள்ள, பள்ளியில் அமர்ந்திருந்த அரசன், பெரும் படையோடு, பகைவர் மேல்செல்லும் போரை விரும்பும் நிலையில், அப்போரை எப்படியெல்லாம் நடத்தலாம் என்ற ஆய்வுச்சிந்தனையிலேயே ஆழ்ந்து விட்டமையால், கண்ணுறக்கம் கொள்ளாமலே இருந்து. நடந்து முடிந்த போரில், பகைவர் எறிந்த வேல் பாய்ந்ததனால், புண் பெற்று அப்புண் தரும் நோய்க் கொடுமையால், தத்தம் காதற் பிடியானைகளை மறந்துவிட்ட களிற்றுப்படை களின் நிலையையும், பகையரசன் காற்படையைச் சேர்ந்த யானைகளின், நீண்ட பெரிய, துதிக்கைகள், அடியுண்ட, மலைப்பாம்புகள் துடிப்பது போல் துடிக்குமாறு, வெட்டுண்டு வீழ்ந்து கிடக்கப் பண்ணி, தேன்துளிக்கும், தம் தலைமாலைக்குச் சிறப்பளிக்கும் நல்ல வெற்றி பெற்று விட்டு, ஆனால், அவ்வெற்றிக்கு விலையாக, உயிர் இழந்து, செஞ்சோற்றுக்கடன் தீர்த்த கர்ல்ாட்படைப் பெருவீரர் செயல்களை எண்ணியும்,