பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

முள்வேலிகள்



முடியும். அதுவரை நான் உங்களைப் பார்க்கலே. பேசலே. வரேன்.'

பாகவதர் அவன் வெளியே போகச் சொல்லிக் கூப்பாடு போடுமுன் தானகவே வெளியேறிச் சென்று விட்டார்.

அன்று மாலையில் மகிழ்மாறன் கண்ணனைத் தேடி வந்து மறுபடி பாகவதரையும், அம்மிணியம்மாளையும் பற்றி ஒரு வண்டி புகார்களை அளந்து விட்டுப் போனர். லேசாகச் சிந்திக்க ஆரம்பித்திருந்த கண்ணனுடைய மனம் எனும் வேதாளம் மறுபடி முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது. அங்கு ஏற்கெனவே தேங்கி நாற ஆரம்பித்திருந்த துவேஷம் என்ற பழைய வெள்ளம் வடியாததோடு புதிதாகவும் வெறுப்பு ஊறித் தேங்க ஆரம்பித்திருந்தது.

14

ண்ணனுக்கு அது ஒரு ஃபோபியா ஆகிவிட்டது. அம்மிணி அம்மாளையும் பாகவதரையும் பதிலுக்கு அவமானப் படுத்திவிட அவன் முயன்ற எந்த வகை முயற்சியுமே வெற்றி பெறவில்லை. எல்லாம் தோல்விதான்.

அம்மிணி அம்மாள் லைசென்ஸ் இல்லாமல் இரட்டை நாய்கள் வளர்ப்பதாகவும் அவை போடும் சத்தத்தில் பக்கத்து வீட்டுக்காரனாகிய தான் இராப் பகல் தூக்கமின்றி அவஸ்தைப் படுவதாகவும், அந்த நாய்கள் தான் உட்படத் தெருவில் போவோர் வருவோரை எல்லாம் கடிக்க முற்படு தாகவும் அவன் எழுதிய புகாரை யாரும் பொருட்படுத்தவே இல்லை. நீண்ட நாட்களுக்குப்பின் அவன் புகாரில் உண் மையில்லை எனக் கூறி நாய்களுக்கு லைசென்ஸ் பெறப்பட்டி ருப்பது- அவை கட்டிப் போடப்பட்டிருப்பது முதலிய விவரங்களைத் தெரிவித்து ஒரு பதில் மட்டும் கார்ப்பரேஷன் ஹெல்த் டிவிஷனிலிருந்து அவனுக்கு வந்தது. ஆகவே