பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா.

107



கிறோமோகிறோமோ என்று கூடத் தன்னைப் பற்றியே அவனுக்குச் சந்தேகமாக இருந்தது. ஆனால் பாகவதர் மேலும் அம்மிணி அம்மாள் மீதும் அவனாகக் கற்பித்துக் கொண்ட விசோதம் அவனை அவ்வப்போது தூண்டியது. செயற்படச் செய்தது. வேகப்படுத்தி முடுக்கி விட்டுக் கொண்டிருந்தது.

15

சொல்லியபடி நண்பன் மறுநாளே கண்ணகனத் தேடி வந்து பேட்டிக்காகத் தயாரித்த கையெழுத்துப் பிரதியைக் கொண்டு வந்து கொடுத்து விட்டான். புலவரும், உண்மை விளம்பியுமாகச் சேர்ந்து பிரமாதமாகப் பொடி வைத்துத் தயாரித்திருந்தார்கள் அதை. கண்ணனே தயாரித்திருந்தால் இவ்வளவு சாமர்த்தியமாகச் செய்திருக்க முடியாது. பட்டைச் சாராயச் செலவுக்கு முப்பது ரூபாய் செலவழித்தாலும் பரவாயில்லை விஷயம் கண்ணன் எதிர் பார்த்ததை விடப் பிரமாதமாக வந்திருந்தது. கண்ணன் அதை இரண்டாவது தடவையாக மறுபடியும் படித்துப் பார்த்தான்.

'அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் பற்றிப் பேட்டி கொடுக்கிற அளவு நான் ஒன்றும் அத்தனை பெரிய மனிதன் இல்லை. சர்க்கார் உத்தியோகம் பார்க்கும் ஒரு கெளரவ மான குடும்பத்தலைவன். அவ்வளவே. அதோடு தன்மான முள்ள நல்ல தமிழன். r

நகர வாழ்க்கையில் அக்கம்பக்கத்திலே உள்ளவர்கள், ஒழுக்க சீலர்களா, கெளவரமானவர்களா என்றெல்லாம் சரி பார்த்து அப்புறம் குடியேறுவது சாத்தியமில்லை. யார் வேண்டுமானலும் உங்கள் பக்கத்து வீட்டுக்காரராக இருக்க லாம். இருக்க முடிகிறது. நம் கெளரவத்தை மட்டுமே நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும்.