பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

முள் வேலிகள்



முடியுமே ஒழிய, கேரக்டர் அஸாஸிநேஷன்' போல எதுவும் செய்ய முடியாது என்ற நம்பிக்கை கண்ணனுக்கு உறுதியாக இருந்தது. தான் அவர்களைப் பற்றிக் கொடுத் திருக்கும் போட்டியிலோ சட்டப்படி தன் மேல் நடவடிக்கை எடுக்கமுடியாத ஆனால் கேரக்டர் அஸாஸிநேஷன்" போலவே தெளிவாகத் தெரியக் கூடிய விஷயங்கள் அடங்கி யிருப்பதை அவன்புரிந்து கொண்டுதான் இருந்தான். அதை அவ்வளவு சாதுரியமாகத் தயாரித்த தன் விஷமக்கார நண்பர்களுக்கம் அவர்களுக்கு ஊக்கமளித்திருந்த நாட்டுச் சரக்குக்கும் கூட நன்றிசெலுத்தினான் கண்ணன். உண்மை விளம்பி’ என்கிற பத்திரிகையே கூட இந்த நாட்டுச் சரக்கின் அபார உற்சாகத்தில்தான் வெளிவந்து கொண்டிருக்கிறது என்கிற பாம இரகசியம் கண்ணனுக்கு இப்போதுதான் புரிய ஆரம்பித்திருந்திருந்தது.

கூடவே இன்னொரு தயக்கமும் இருந்தது. இப்படிப் பட்ட செய்திகள் நாட்டில் இப்போதெல்லாம் எந்த அதிர்ச்சி யையும் ஆச்சரியத்தையும் உண்டாக்கி யாரையும் பாதிப்ப தில்லை, மாறாகச் சர்ச்சைக்கு ஆளாகிறவர்களின் பப்ளிஸிடி தான் அதிகமாகும்'- என்று எப்போதோ பாகவதர் தன்னிடம் கூறியிருந்ததை இன்று மீண்டும் நினைத்தான் கண்ணன். ஒருவகையில் பார்த்தால் இன்றைய மனிதர்களையும், சமூகத்தையும் பற்றிய பாகவதரின் கணிப்புத் துல்லிய மானதும் சரியானதும் ஆகும் என்றே அவனுக்குத் தோன்றியது. ஒழுக்கமாயிருக்கிறோம் என்ற சுயதிருப்தி தனிமனிதனுக்கு ஆத்ம சந்தோஷத்தைத் தரலாமே ஒழிய சமூகம் அவனை ஒரு வாட்ச்மே&னப் போலவோ போலீஸ் காரணப் போலவோ கவனித்துக் கொண்டிருப்பதை விட்டு அதிக காலமாயிற்று. தனக்கு உதவுகிறவர்கள், தன்னை ஆதரிப்பவர்கள், தனக்குப் பயன்படுகிறவர்கள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று அவர்களை ஏற்றுக் கொண்டு விடுகிற ஃபிளெக்சிபிலிட்டி சமூகத்துக்கு வந்து ரொம்ப நாளாகியிருக்கவேண்டும். அது அம்மிணி அம்மாளின்