பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா.

118


ஆரம்ப கால வாழ்வையோ இன்றைய தனி வாழ்வையோ கவனிக்கத் தயாராயில்லை. பொது வாழ்வில் எப்படி நடந்து கொள்கிறாள் என்பதை மட்டுமே கவனித்துப் பாஸ் மார்க் போட்டு விடுகிறது. அதேமாதிரித்தான் பாகவதர் விஷயத்தி லும் நடக்கிறது. அவருக்குக் கிடைக்கிற பட்டுப் புடைவை, சரிகை வேஷ்டிகளைத் தேவைக்கு வைத்துக் கொண்டு மீதியை விற்கிறார், இதிலென்ன தவறு?-என்றுகூட விவாதம் புரிய முடியும். ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ அம்மிணி அம்மாள் வயதிலும் கட்டு விடாத ஒர் அழகிய முதியவள் அப்படி அழகிய முதியவர் ஒருவரிடம் சபலத் தோடு பழகுவது பெரிய சமூகக் குற்றமாகக் கருதப்படப் போவதில்லை. மனம் பெரிதாகப் பெரிதாகச் சிறிய குற்றங் களைப் பூதக் கண்ணாடி வைத்துப் பெரிசாக்குகிற மனப் பான்மை தானே கரைந்து போய்விடுவது சகஜம் என்கிறார்கள். அப்படியானால் தனக்கு இன்னும் மனம் விசாலமடைய வில்லையா என்ற கேள்வியைத் தனக்குத்தானே கேட்டுக் கொண்டான் கண்ணன். இன்னென்றையும் அவனே அநுமானித்துக் கொள்ள முடிந்தது. -

இன்றுள்ள நிலே யில் அம்மிணி அம்மாளோ அவள் பெண்களோ நினைத்தால் உண்மை விளம்பியை அல்லது மகிழ்மாறனப் போன்றவர்களை ஒரு விலை பேசி வாங்கிக் கொண்டுவிடமுடியும். கொஞ்சம் சுமாரான விலேயே கிடைத் தால் கூட இந்த நண்பர்கள் எல்லாம் விற்றுப் போய்விடச் சம்மதிப்பார்கள் என்பது கண்ணனுக்கே தெரிந்த விஷயம் தான்,ஏற்கெனவே உண்மை விளம்பி அம்மிணி அம்மாளின் பெண்களிடம் தேடிப் போய்ப் பணம் கேட்டிருக்கிறான். புலவர் விஷயம் சொல்லவே வேண்டாம், அவர் நன்கொடை என்று கொண்டுபோய் நீட்டுகிற ஏதாவது ஒரு நோட்டில் பத்து ரூபாய் நன்கொடை எழுதி அம்மிணி அம்மாள் கையெழுத்துப் போட்டுவிட்டால் அதையே ஆயிரம் ரூபாயாகத் திருத்திக் கொண்டு மற்றவர்களிடம் கறக்கப் போய்விடுவார். இருந்தும் இவர்களே நம்பித் தான் ஒரு