பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

115

முள்வேலிகள்



என்ற பேட்டியுடன் பாகவதரின் பேட்டியும் சேர்ந்து பிரசுரமாகியிருந்தது.

பாகவதர் தன் பக்கத்து வீட்டுக்காரனான கண்ணனைப் பற்றி எதுவும் சொல்லாமல், சமாளித்திருந்தார்.

  • என்னோட உடனடியான பக்கத்து வீட்டுக்காரருக்கும் எனக்கும் அத்தனை சுமுகமான உறவு இல்லை. அதனால அவரைப் பற்றி நான் புகழ்ந்தாலும் தப்பா இருக்கும். நிந்திப்பதும் முறையாக இருக்காது. ஆகவே அந்த வீட்டை விட்டுவிட்டுப் பொன்குன்னம் அம்மிணி அம்மா வீட்டைப் பத்தியே சொல்லிடறேன். -

அந்த வீட்டார் என்னைத் தங்கள் காட்ஃபாதர் மாதிரி நினைக்கிறாங்க. நானும் அவாளை என் குழந்தைகள் மாதிரிப் பாவிச்சுப் பிரியமாப் பழகறேன். அம்மிணிக்குப் பூமாதிரி மனசு. நிறைய தர்மம் பண்றா அவளுடைய பெண்கள் சினுமாவிலே எப்பிடி எப்பிடி நடிக்கிறாளோ, வீட்டிலே அவா எதுவும் நடிக்கிறதில்லே. பக்தி சிரத்தை, பெரியவர் களிடத்திலே மரியாதை எல்லாம் உள்ள குடும்பம் அது. இப்படிப்பட்ட ஒரு பெரிய கலைக் குடும்பத்துக்குப் பக்கத்தி லேயே குடியிருக்க நேர்ந்ததை என் பாக்கியம்னே சொல்லனும்'- என்பது போல் சொல்லியிருந்தார். அருகே பாகவதரை அம்மிணி அம்மாள் வணங்குவது போல ஒரு படமும் பிரசுரமாகியிருந்தது. ----

மூன்று விஷயங்களிலும் தன்னுடையதில்தான் காரம், கரம் எல்லாமே, அதிகமென்று அவனுக்கே தோன்றியது. சுகன்யாவின் மேல் ஆத்திரம் மூண்டது அவனுக்கு. அம்மிணி அம்மாளின் மகள் செக்ஸ் ராணி நந்தினி தான் இப்படி ஒரு பேட்டியளித்திருப்பதைச் சுகன்யாவிடம் சொல்லிவிட்டுத்தான் செய்திருக்க வேண்டும் என்ற அவசிய மில்லை. சொல்லாமலும் செய்திருக்கலாம். அப்படியானால்