பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

முள்வேலிகள்



விளம்பியிடம் துணிந்து பணம் தர முடியாது என்று அவள் மறுத்ததாகக் கண்ணன் மனைவி மூலமாகக் கேள்விப்பட்டி ருந்தான். அப்படிப்பட்டவளா இப்போது இப்படிப் பத்தாயிரம் ரூபாயைத் தூக்கிக் கொடுத்து மன்றம் தொடங்கச் சொன்.னாள் என்று நம்ப முடியாமல் இருந்தது கண்ணனுக்கு

வீடு திரும்பியதும் மனைவியிடம் இதைச் சொல்லி விசாரித்தான். சுகன்யா அவனுடைய சந்தேகத்தைத் தெளிவு செய்தாள். அது இவ இல்லே! அம்மிணியம்மா வோட இன்னொரு பொண்ணிட்ட அந்த உண்மைவிளம்பி பிளாக்மெயில் பண்ணி னப்போ அவள் அவன் கிட்டே போடா போன்னுட்டா! இது நந்தினி. பண விஷயத்திலே இவ போக்கு வேற மாதிரி. மலிவாக் கிடைச்சா நம்ம விரோதியை விலக்கு வாங்கி நாய் மாதிரி நம்ம வீட்டு வாசற்படியிலேயே கட்டிப் போட்டு நம்மைப் பர்ர்க்கிறப்பல் லாம் வாலைக் குழைக்கிற மாதிரிப் பண்ணிடனும் அக்கா!' என்பாள் இவள், இந்தப் புலவர் விஷயம் கூட எங்கிட்டே சொன்னாள். எனக்கு முன்னலேயே தெரியும். உங்ககிட்டே நானாச் சொன்னா நீங்க கோபிச்சுப்பீங்களோன்னுதான் சொல்லலே' என்றாள் சுகன்யா,

அதைக் கேட்டுக் கண்ணன் மனைவியின் முகத்தை நிமிர்ந்து ஏறிட்டுப் பார்க்க முடியாமல் தலைகுனிந்தான்.

அவனுக்கு வெட்கமாக இருந்தது. மனிதர்களை எடை

போடுவதில் தன்னே விடத் தன் மனைவி கெட்டிக்காரியாயிருப் பதாய் மிகவும் காலதாமதமாக இப்போதுதான் புரிந்து கொண்டான் அவன். i

'இந்த மாதிரி மன்றம் அது இதுன்னெல்லாம் தொடங்க அம்மிணி அம்மா எப்படிச் சம்மதம் கொடுத்திருக்க முடியும் சுகன்யா? அவளுக்குத்தான் இதெல்லாம் ஒண்னும் பிடிக்காதே?”

பிடிக்காதுதான்! ஆனால் இது அம்மாவைக் கேட்காமல் நந்தினி தானாகப் பண்ணிக் கொண்ட ஏற்பாடு. அவளைக்