பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

முள்வேலிகள்



இரு கரையும் நிமிர நீர் ஒடும். அதிகப்பட்சமாக அவர்கள் பார்த்திருந்தது இவற்றைத்தான். இதுவோ புதுமையான அனுபவம், முதல் பயங்கர அனுபவம். அந்தத் காலனிக்குள் ஒடிய கால்வாய் அடையாறில் போய்க் கலக்கின்றது. அடையாறில் அதிக வெள்ளமாக இருந்து, மழை நீர் போதா தென்று அந்தத் தண்ணிர் வேறு எதிர்த்துக் கொண்டு கால் வாய் வழியே காலனிக்குள்ளும் மற்றத் தாழ் வான பகுதிகளுக்குள்ளும் புகுந்திருப்பதைச் சுலபமாகவே ஊகித்து உணர முடிந்தது. மின்சாரம் இல்லாததால் எங்கே எதைத் தேடி எடுப்பது என்று தெரியவில்லை. தண்ணிர் அளவு விநாடிக்கு விநாடி மேலே ஏறிக் கொண்டிருந்தது. சுவரில் அடையாளம் பார்த்தாலே அது தெரிந்தது.

பாத்ரும் கதவைத் திறத்தால் ஒரே கோரம். ப்ளஷ் அவுட்டிலிருந்து சகலமும் பொங்கிக் கொண்டு தண்ணிர்ப் பரப்பிற்கு வந்து மிதக்கத் தொடங்கியிருந்தது. சுகன்யாவுக்குக் கையும் ஒடவில்லே காலும் ஒடவில்லை.

பதறிப் போய்க் கணவனே எழுப்பினள். அவன் உடம்பு நெருப்பாய்க் கொதித்தது. தன் நினேவே இல்லாமல் அடித்துப் போட்ட மாதிரி தூங்கிக் கொண்டிருந்தான். கீழே நீர்ப்பரப்பில் காலை வைத்து விடாமல் தடுத்து அவனுக்கு அவள் நிலைமையை விளக்கிப் புரிய வைக்கச் சில நிமிஷங்கள் பிடித்தன. கண்ணனுக்குக் கால்கள் தள்ளாடின.

வீட்டிற்குள் நீர் மட்டம் கிறுகிறுவென்று ஏறிக் கொண் டிருந்தது. கட்டில் முழுக இன்னும் ஓர் அடி தண்ணிர் அதிக மானுலே போதும், ஜுரத்தையும் பொருட்படுத்தாமல் அவன் கீழிறங்கி நனைந்தபடி தள்ளாடித் தள்ளாடி ரேடியோ, டெலிவிஷன், அரிசி மூட்டை என்று முடிந்தவற்றைத் தரையிலிருந்து ஏணியைச் சாத்திப் பானுக்கு மாற்றினான். அவனால் முடியவில்லை. அதிகமாகத் தள ளாடியது. இருட்டு வேறு. டார்ச்சில் ஸெல் வீர்யம் குன்றி ஒளி மங்கிக்