பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

முள் வேலிகள்

"அத்தனை நல்ல சகவாசமில்லை. இன்னிக்கோட விட்டுத் தொலை! அவ்வளவுதான் சொல்லுவேன்."

"நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லே! அந்தம்மா ரொம்ப நல்ல மாதிரியாக்கும்."

"சீ! வாயை மூடு உனக்கு எல்லாம் தெரிஞ்சமாதிரிப் பேசாதே...வேண்டாம்னா வேண்டாம்."

"உடனே முடியாது! படிப்படியாக் குறைச்சுக்கிறேன்."

2

காலனி நலம் நாடுவோர் சங்கத்தின் உறுப்பினர்கள் சந்தித்து நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்தனர். ஆரம்பமுதல் அந்தச் சங்கத்தை அமைக்கப் பாடுபட்டவன் என்ற முறையில் கண்ணனையே அதன் செயலாளராயிருக்கும்படி மற்ற எல்லோரும் வற்புறுத்தினார்கள், அவனாலும் அதைத் தட்ட முடியவில்லை.

ஓய்வு பெற்ற போஸ்ட்மாஸ்டர் ஒருவர்-அந்தக் காலனி வாசியாயிருந்தார்-அவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்து விட்டார்கள்.

செயற்குழு உறுப்பினர்கள் என்று சங்க வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டிய சிலரையும் தேர்ந்தெடுத்து விட்டார்கள். புதிதாக வீடுகள் ஒதுக்கப்பட்டுக் காலனிக்குள் குடியேறுகிற ஒவ்வொருவரையும் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்க்க வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அந்தச் சமயத்தில் கூட, 'அவர்களாகவே சேர முன் வந்தாலும் கூட நாம் சிலரை உறுப்பினராகச் சேர்க்கக் கூடாது. சிலரால் இந்தப் பேட்டையின் நற்பெயருக்கே