பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா.

189


கண்ணனுக்கு நீந்தத் தெரியாது. இத்தனை கஷ்டத்திலும் எதுவும் உறைக்காமல், எதுவும் புரியாமல் நிச்சலனமான, திருப்தியுடன் காகிதக் கப்பல்களை மிதக்கவிட்டுக் கை தட்டிச் சந்தோஷப்படும் சிறு குழந்தைகளைப் பார்த்துக் கண்ணனுக் குப் பொறாமையாயிருந்தது. ஒருவண்டி பழைய காகிதங்களை எடுத்துக் குவித்து வைத்துக் கொண்டு அந்தக் குழந்தை களுக்குக் கப்பல் செய்து கொடுத்து அவர்களே உற்சாகப் படுத்திக் கொண்டிருந்த பாகவதரையும் அம்மிணி அம்மாளை யும் பார்த்தபோது இன்னும் பொறாமையாக இருந்தது அவனுக்கு. இவ்வளவு பெரிய சிரமங்களுக்கு நடுவில் இந்தக் குழந்தைகளோடு குழந்தைகளாக உட்கார்ந்து இவர்களுக் குக் காகிதக் கப்பல் செய்து கொடுத்துத் திருப்திப் பட்டுக் கொண்டிருக்கும் இவர்கள் மனம் எத்தனை தூரம் அகந்தை, யின்றிக், களங்கமின்றி, ஆசாபாசமின்றித் தூயதாய் இருக்க வேண்டும் என்பதை நினைத்தபோது இதுவரை அவர்களைத் தப்பாக எடை போட்டுத் தப்பாகவே கருதிய தன் கீழ்மைக் குணத்துக்காக வெட்கப்பட்டான் கண்ணன். மூன்று பகல் மூன்று இரவுகள். மழை விடவும் இல்லை. வெள்ளம் தணியவும் இல்லை. சூரியன் வெளியே முகத்தைக் காட்டவு மில்லை. எங்கும் ஒரே பிரளயம்தான். . -

20

மின்சாரம் இல்லாததால் மாலையில் ஐந்து ஐந்தரை மணிக்கே இருட்டியது போலாகியது. வீட்டுக்குள் அடைந்து கிடந்தவர்களுக்கு ஒரு மாறுதலாகவும், ஆறுதலாகவும்இருக்கட்டும் என்று பாகவதர் அம்மிணியம்மாள் வீட்டு: மாடியில் “சுபத்ரா கல்யாணம்” கதை சொன்னார்.