பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா

141


வளர்க்க முடியாது! உலகிலிருந்து போகும்போது யாரும் எதையும் தலையில் கட்டி எடுத்துக் கொண்டு போகப் போவதில்லை. இருக்கிற வரை அக்கம் பக்கத்தாருக்கு உதவி செய்து-உதவிகளைப் பெற்று உபகாரியாக வாழ் வதிலுள்ள சந்தோஷம் வேறு எதனாலும் மனிதனுக்குக் கிடைக்கப் போவதில்லை. பொறாமையினால் துவேஷமும், துஷேத்தினால் சுயநலமும்தான் மாறி மாறி உண்டாக, முடியும். துவேஷம் என்பது அசுர குணம். அன்புதான் மனித குணம். கண்ணன் அன்பின் வடிவம் என்றால் கம்சன் வெறுப்பின் வடிவமாயிருந்தான். ஒரு தேவனும் அரக்கனும் அன்பாலும் வெறுப்பாலும்தான் வித்தியாசப் படுகிறார்கள்.' இதை அங்கே மேலும் உட்கார்ந்து கேட்பதற்குக் கஷ்டமாயிருந்தது கண்ணனுக்கு. கேட்டுக் கொண்டிருக்கும் போதே தான் அழுது விடுவோமோ என்றுகூடப் பயமா யிருந்தது. மெதுவாக ஒசைப்படாமல் எழுந்து தன் அறைக்குப் போய்விட்டான் அவன். -

அப்போது அந்த வீட்டில் யாருமே அவன் செய்த - கெடுதல்களையும் தீமைகளையும் குத்திக் காட்டிப் பேசவில்லை. அவனை விருந்தினனாக மட்டுமே ஏற்று உபசரித்தார்கள். இது அவனப் பெரிதும் சங்கடப்படுத்தியது. மனத்தைப் பாதித்து வேதனைக்குள்ளாக்கியது. - . . . . . . .

மூன்றவது நாள் மழை ஓரளவு குறைந்து வெள்ளம் சிறிது வடிய ஆரம்பித்தபோதுகூடக் கண்ணனின் வீட்டுக் காம்பவுண்டில் மட்டும் வந்து தேங்கிய வெள்ளத் தண்ணிர் அப்படியே நின்றது. அணை எடுத்துத் தடுத்த மாதிரி அளவு குறையாமல் அது இருந்தபடியே இருந்தது.