பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சுலட்சணா காதலிக்கிறாள்


1


ட்ட மேற்படிப்புக்காகத் தனியே ஏற்படுத்தப்பட்டி ருந்த பல்கலைக் கழக நூல் நிலையத்தில்தான் சுலட்சணாவை அவன் முதல் முதலாகச் சந்திக்க நேர்ந்திருந்தது. அந்தப் பல்கலைக் கழகத்தில் இரண்டு தனத்தனி நூலகங்கள் இருந்தன. -

எல்லாருக்கும் எல்லாவகையிலும் எப்போதும் பயன் படுகிற பொதுவான பெரிய நூலகம் ஒன்று. மேற்பட்டப் படிப்புப் படிக்கிற மாணவர்களுக்கும் கற்பிக்கிற பேராசிரியர்களுக்கும் மட்டும் பயன்படுகிற போஸ்ட். கிராஜுவேட்ஸ் லேப்ரரி என்னும் சிறப்பு நூலகம் மற்றொன்று. குளுகுளுவென்று ஒரு சூழ்நிலை நிலவும் அங்கே. .

இந்தச் சிறப்பு நூலகம் மரங்களடர்ந்த சோலை போன்ற பகுதியில் ஓர் ஏரிக்கரையிலே அமைந்திருந்தது. எந்நேரமும் ஜிலு ஜிலு என்று காற்று வரும். வெளி உலகின் சத்தங்களும் ஆரவாரச் சந்தடிகளும் கேட்காத இடம் அது. போய் உட்கார்ந்தால் கண்களைச் சொருகிக்கொண்டு தூக்கம் வரும். ... . . . .

இதனால் மாணவர்கள் இந்த நூல் நிலயத்துக்கு 'வசந்த மண்டபம்' என்று செல்லமாகப் பெயர் வைத்திருந்தார்கள். மற்றொரு நூலகம் அரை வட்டவடிவில் மூன்றடுக்கு மாளிகை யாகக் கட்டப்பட்டிருந்தாலும் அங்கே காற்று மருந்துக்கும் கூட வராது. சுற்றி மரம் செடி கொடிகளும் அறவே இல்லை.