பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பா.

147



கள் உண்டு. புத்தகத்தைப் படித்த மாணவர் வகுப்பில்

அதைச் சுருக்கமாக விமர்சிக்க வேண்டும்.

இப்படி ஒரு வெள்ளிக் கிழமை மாலையில் ஒரே புத்தகத் தைத் தேடிக்கொண்டு போன போதுதான் சுலட்சணாவும்,கனகராஜூம் சந்தித்துக் கொண்டார்கள்.

- பொதுவாகப் போஸ்ட்கிராஜுவேட்ஸ் நூலகத்தில் ஒவ்வொரு புத்தகமும் இரண்டு முதல் நான்கு பிரதிகள் வரை இருக்கும். ஆசிரியர்கள், மாணவர்கள் எல்லாருக்கும் ஒரே சமயத்தில் கொடுக்க வேண்டியிருப்பதால் இந்த ஏற்பாடு செய்திருந்தார்கள். இருந்தும் சமயா சமயங்களில் பலர் ஒரே நேரத்தில் ஒரே புத்தகத்தைத் தேடிக்கொண்டு வர அந்த ஒரே புத்தகத்தின் ஒரு பிரதி மட்டும் அங்கே இருக்க நேர்ந்து அதை யாருக்குத் தருவது என்ற தர்மசங்கடம் லைப்ரேரிய னுக்கு ஏற்பட்டிருக்கிறது.

அன்றும் சுலட்சணாவும்-கனகராஜூம் ஒரே புத்தகத் தைத் தேடிவந்தபோது பல்கலைக்கழக நூலகருக்குத் தர்ம சங்கடமான நிலைமைதான் ஏற்பட்டது. இருக்கிற ஒரு பிரதியை இருவரில் யாருக்குத் தருவது? இருவருமே தங்களுக்கு வேண்டும் என்பதை வற்புறுத்தினார்கள். இருவரில் யாரும் விட்டுக்கொடுக்கத் தயாராயில்லை. நான் தான் நீங்கள் சொல்லிய புத்தகத்தை முதலில் படித்தேன்'. என்று பேராசிரியரிடம் போய்ப் பீற்றிக்கொள்ளும் வாய்ப்பை இருவருமே இழக்க விரும்பவில்லை. .

லேடீஸ் ஃபர்ஸ்ட்-னு மரபே இருக்கு' என்று புன்னகை யோடு மெல்லத் தொடங்கித் தன்னுடைய முன்னுரிமையை நிறுவ முயன்றாள் சுலட்சணா. கனகராஜூம் விடவில்லை. இருக்கலாம்! அதெல்லாம் இந்திய மரபு இல்லை. ஆங்கில மரபு. நம்ம யூனிவர்ஸிடி அமெரிக்காவிலியோ ஐரோப்பாவி லியோ இல்லை. இந்தியாவிலேதான் இருக்கு. இங்கே லைப்ரேரியனேட டெஸ்குக்கு முன்னாடி ரெண்டு பேரும் ஒரே